மாதம் ₹100000 2-வது வருமானம்! கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் NRI Financial Plan!

Spread the love

கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் என வளைகுடா நாடுகளில் வெயிலில் உழைத்து ஊதியம் சேர்க்கும் நண்பர்களே! ஒரு நிமிடம் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். ‘இதே ஓட்டத்தை இன்னும் எத்தனை காலத்துக்கு ஓடப்போகிறோம்?’

வரி இல்லாத வருமானம், ஊரில் கெத்து, சொந்தங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் பெருந்தன்மை என எல்லாமே வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மேஜிக் போலத் தெரியலாம். ஆனால், உங்களுக்கு மட்டுமே தெரியும், ஒவ்வொரு மாதமும் ஊருக்குப் பணம் அனுப்பிய பிறகு, உங்களுக்காக எஞ்சியிருப்பது ‘அடுத்து என்ன?’ என்ற பயம்தான்.

60 வயதில் உங்கள் சொந்த ஊரில் வந்து இறங்கும்போது, உங்கள் மாதாந்திரச் செலவுகளுக்காகப் பிள்ளைகளின் கையை எதிர்பார்க்கக் கூடாது. அந்த வயதில் உங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றப்போவது உங்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் விழப்போகும் இரண்டாம் வருமானம் மட்டுமே.

passive income

‘முடங்கிய பணம்’ vs ‘முளைக்கும் பணம்’: உங்களுக்கு எது வேண்டும்?

வளைகுடாவில் உள்ள பெரும்பாலானோர் செய்யும் ஆகப்பெரிய தவறு, ஊரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பெரிய நிலம் வாங்குவதும், தேவைக்கு அதிகமாக பிரம்மாண்டமான வீட்டைக் கட்டுவதும்தான். ₹1.5 கோடியை ஊரில் ஒரு வீட்டில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து வெறும் ₹25,000 (2% – 3%) வாடகை வருமானத்தை எதிர்பார்த்தால், உங்கள் பணத்தின் மதிப்பைப் பணவீக்கம் சத்தமில்லாமல் தின்றுவிடும்.

இதுதான் ‘முடங்கிய பணம்’ (Dead Asset). உங்களுக்கு ஒரு மருத்துவ அவசரம் என்றால், அந்த வீட்டின் ஒரு செங்கலை விற்றுப் பணமாக்க முடியுமா? முடியாது. எனவே, உங்களுக்குத் தேவை ‘முளைக்கும் பணம்’ (Liquid Asset). தேவைப்படும் நேரத்தில் பணமாக மாறும், அதே சமயம் உங்களுக்காகத் தொடர்ந்து உழைக்கும் முதலீடுகள் மட்டுமே 60 வயதில் உங்களுக்குச் சோறு போடும்.

INvestor planning his investment
INvestor planning his investment

பல்வகை சொத்து முதலீடு: ஸ்மார்ட்டான வியூகம்

பாதுகாப்பு என்ற பெயரில் பணத்தை FD-யிலோ அல்லது அரசுப் பத்திரங்களிலோ (G-Secs) முடக்குவது பழைய பஞ்சாங்கம். 45+ வயதில் நீங்கள் இருக்கும் இந்த நிலையில், பணத்தை சரியான விகிதத்தில் பிரித்து முதலீடு செய்வது அவசியம்.

பங்குச்சந்தை, கடன்பத்திரங்கள் மற்றும் தங்கம் என மூன்றிலும் முதலீட்டைப் பிரிக்கும் ‘Multi-Asset Allocation Funds’ல் கவனம் செலுத்துங்கள். இது அதிக ரிஸ்க் இல்லாமல், பணவீக்கத்தைத் தாண்டி உங்களுக்கு நிலையான லாபத்தைக் கொடுக்கும். இதுவே நீங்கள் ஊர் திரும்பும்போது உங்களுக்கான நிம்மதியைத் தரும் ஃபார்முலா.

60 வயதில் ₹1 லட்சம் மாதாந்திர வருமானம் வேண்டுமா?

60 வயதில் மாதாமாதம் ₹1 லட்சம் உங்களுக்கு வர வேண்டும் எனில், உங்கள் கையில் உள்ள தொகுப்பு நிதி (Corpus) குறைந்தது ₹3 கோடியாக இருக்க வேண்டும் (பாதுகாப்பான 4% SWP Withdrawal அடிப்படையில்). 44 வயதில் இருக்கும் ஒருவருக்கு இன்னும் 16 ஆண்டுகள் அவகாசம் உள்ளது.

Investment

இதை எப்படி அடைவது?

திட்டம் 1: மொத்த முதலீடு (Lumpsum Investment)

வளைகுடாவில் 10+ ஆண்டுகளாக வேலை செய்யும் ஒருவரிடம், ஊரில் முதலீடு செய்யாமல் சேமித்து வைத்த குறைந்தபட்சம் ₹49 லட்சம் முதல் ₹50 லட்சம் வரை இருக்கலாம். இதனை அப்படியே மல்டி அசெட் ஃபண்டில் முதலீடு செய்தால்…

எதிர்பார்க்கும் வருமானம் (CAGR): 12%

முதலீட்டுக் காலம்: 16 ஆண்டுகள்

60 வயதில் கிடைக்கும் தொகுப்பு நிதி: தோராயமாக ₹3 கோடி.

திட்டம் 2: மாதாந்திர முதலீடு (SIP Mode)

கையில் மொத்தப் பணம் இல்லை, ஆனால் வருமானத்தில் மாதாந்திர உபரி இருக்கிறது என்பவர்களுக்கான திட்டம்.

மாதாந்திர SIP தேவை: தோராயமாக ₹51,600

காலம்: 16 ஆண்டுகள் (60 வயது வரை)

எதிர்பார்க்கும் வருமானம்: 12%

60 வயதில் கிடைக்கும் தொகுப்பு நிதி: ₹3 கோடி.

முதலீட்டு ஒதுக்கீடு எப்படி இருக்க வேண்டும்?

குறைந்த ரிஸ்க்கில் நிலையான வளர்ச்சி மற்றும் SWP பயன்பாட்டுக்கு Multi-Asset Allocation Funds (பங்குச்சந்தை, கடன், தங்கம்) 60%

பணவீக்கத்தைத் தாண்டிய அதிகபட்ச மூலதன வளர்ச்சிக்கு Index Funds / Large-Cap 40%

உங்களுக்கு எது முக்கியம் என்பதை முடிவு செய்யுங்கள்.

வளைகுடா வாழ்வில் நீங்கள் இழந்த உறக்கமும், சந்தோஷமும் 60 வயதில் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். ஊர் திரும்பும்போது வெறும் பெட்டிகளோடு வராமல், உங்களுக்காக உழைக்கும் ₹3 கோடியுடன் வாருங்கள். இன்று நீங்கள் செய்யும் ₹51,600 SIP அல்லது ₹49 லட்ச Lumpsum முடிவு, உங்கள் 60 வயதின் கம்பீரத்தைத் தீர்மானிக்கும். உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள், ஊரில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக வாழுங்கள்!

Labham workshop Jun 20 2026

கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் நாட்டு இந்தியர்களுக்கான பிரத்தியேக ஒர்க் ஷாப்

60 வயதில் 1 லட்ச ரூபாய் மாதச் சம்பளம் வேண்டுமா? இதனை அடைய அடுத்தடுத்த படிகள் என்னவென்று தெரிய வேண்டுமா? உங்களுக்கு ஏற்ற சரியான முதலீடுகள் என்ன? அதனை எப்படிச் செய்யலாம்? நஷ்டம் வராமல் தவிர்க்கும் வழிகள் என்னென்ன? அனைத்தையும் தெரிந்துகொள்ள வரும் சனி (ஜூன் 20) 12:30 மணிக்கு நடைபெறும் சிறப்பு நிதி வழிகாட்டலில் கலந்துகொள்ளுங்கள் (வளைகுடா வாழ் இந்தியருக்கு மட்டுமே!)

முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மீட்டிங் லிங்க் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். ரெஜிஸ்டர் செய்ய https://labham.money/events/webinar-jun20-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jun20_2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *