“மாதவிடாய் நிற்கும் முன்பருவமும் நானும்!” – பெண்களின் உடல், மனம் குறித்த ஓர் ஆத்மார்த்தப் பதிவு

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

“மாதவிடாய் நிற்கும் முன்பருவமும் நானும்

என்னை நானே காண்கின்ற

பருவத்தில் நுழைகின்றேன்

நிறுத்தி நிதானமாக கண்ணாடியில்

என் முகத்தை பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன்.

அவசரகதியில் ஒடிக்கொண்டே இருந்ததில்

என் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதற்கு மறந்தே போயிருந்தேன்.

அதனாலயே இந்த சுய உருவப்படங்களை உருவாக்கியுள்ளேன்.

பால்யத்தில் அடுப்பங்கரையில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது அதன் காம்புகளை மூக்குத்தியாக, நெற்றிச்சூட்டியாக என்று ஒட்டி அலங்கரித்துக்கொள்வேன்..

அதன் பிறகு எனக்கான அடுப்பங்கரையையும் நாளும் கிழமையும் தந்தது..

அந்தக் கிழமையிலிருந்து,

வெண்டைக்காய் சமைக்கும்போதெல்லாம்

அதன் காம்புகளை மூக்குத்தியாக நெற்றிச்சூட்டியாக,அடுத்து நெக்லஸாகவும் அணிந்து கொண்டு அழகு பார்த்துக்கொள்வேன்.

காய்கள் நறுக்கும்போதுதான் நிறைய கதைகள்,கவிதைக்கான சொல்லாடல்களெல்லாம் தோன்றும்

அதெல்லாம் அடுப்பில் வாணலியை வைத்ததுமே மறந்துவிடும்

பிறகு அறையில் டிவியில் சினிமா ஒடிக்கொண்டிருக்கும்

நானோ சன்னல் அருகே நின்றுகொண்டு எப்படியாவது அந்த கதையை, கவிதைச் சொல்லாடல்களை நினைவடுக்கில் தேடித் தேடி இறுதியில் கவிதையும் வேணாம் வெங்காயமும் வேண்டாம் என்று குருவிகளின் சப்தத்தை கேட்க ஆரம்பித்துவிடுவேன்.

ஒரு மணி நேரம் முன்பு சிந்தையில் உதித்தச் சொற்களை மறந்துபோகின்ற மூளை பால்யத்தில் என் மீது பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்திய முகங்களை அதன் தழும்பற்ற காயங்களை மாத்திரம் ஏன் மறக்கவேமாட்டேங்கிறது.. என்று மூளையை கடிந்து கொள்ளும்போதுதான் பால் காய்ச்சுவதற்காக அடுப்பில் வைத்துவிட்டு வந்த பால் பொங்கி அடிப்பிடித்து அதன் நாற்றம் நாசிக்கு வரவே அடுப்படிக்கு ஓடுவேன்..

இது அடிக்கடி நிகழும்

சில சமயம் பால் பொங்குறவரை அதன் அருகிலேயே காத்துக்கிடக்கின்றபோதும் வேறு எதாவது சிந்தனையில் முழ்கி

பால் பொங்கி பால் பாத்திரம் தீஞ்சு கரிச்சட்டியாக மாறிவடும்

எனக்கு இப்பொழுது உலகிலயே பெரிய பிரச்சினையே இந்த தீஞ்சுப்போன பால் பாத்திரத்தை எப்படி துலக்குவது என்பதுதான்.

sink தொட்டியில் நிரம்பி கிடக்கும் அழுக்குப் பாத்திரங்கள்

மேலும் பயமுறுத்தும்.

எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவதற்கு முன்பு அதைப் பார்த்து எப்படி ஏறுவோமோ என்கின்ற ஒருவித பயம் வருமே அப்படி ஒரு பயம் மலைப்பு அயற்சி ஒன்றாக சேர்ந்து பயமுறுத்தும் என்னை..

வெண்டைக்காய் சமையலுக்காக வெண்டைக்காய் காம்புகளை அணிகலனாக்கியதோடு அல்லாமல் இப்பொழுதெல்லாம் ஒவியம் வரைகிறேன்.

வெண்டைக்காய் நிலா, வெண்டைக்காய் சூரியன் வரைந்த பின் அதை வாணலியில் போட்டு வறுப்பதற்கு மனம் வராமல்

வெகு நேரம் அதையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருப்பேன்.

கட்டிலில் எப்பொழுதும் மாத்திரைகள்

சன்னலில் டானிக்குகள்

என் டெல்லிஅம்மாயி அவளின் மூன்று பிள்ளைகளை கணவனை விட்டுவிட்டு கணவனின் அடிப்பாரே என்று பயந்து வீட்டைவீட்டுப் போனவள்,

எதோ வட இந்திய ரெயிலில் பசியில் உறங்கிப்போக அந்த ரெயில் டெல்லி ரயில்வே ஸ்டேசனை வந்தடைய, அங்கிருந்த ரயில்வே கூலி தொழிலாளர்கள் தமிழர்களாக இருக்கவே

அம்மாயிடம் யார்? என்ன? என்று விசாரித்து

தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்ப

உதவி பண்ணுவதாக அந்த தொழிலாளர்கள் கூறும்போது,

அம்மாயி இல்லங்க இத்தனை நாள் கழிச்சி வீட்டுக்கு போனால் என் புருசன் என்னை கொன்றுவிடுவார்

நான் போகவில்லை என்று அழவே..

என் நாமக்கல் அம்மாயி டெல்லி அம்மாயியாக மாறிப்போனாள்.

இப்பொழுது யோசிக்கிறேன்

கண்டிப்பாக என் அம்மாயி வீட்டை விட்டுப் போகும்போது மாதவிடாய் முன் நிறுத்தப் பருவத்தில் இருந்திருப்பாளோ.. என்று.

ஒரு பெண்ணின் உடல் மனம் போராட்ட காலம் மாதவிடாய் முன் பருவ காலத்தில் இருந்தூதான் தீவிரமாகிறது என்று நினைக்ஙறேன்

என் அம்மா அவளின் நாற்பத்தைந்தாவது வயதில்

பெயரனை எடுத்திருந்தாள்

அந்த சமயம் ஒரு நாள் என் அப்பாவிடம் சந்தேகம் பொஸஸிவ் சண்டை போட்டு

சாணிப்பவுடரை குடித்தே விட்டாள்

பேரன் பேத்தி எடுத்த வயதில் என்ன இது? அசிங்கமில்லையா ஜெயா.. என்று அம்மாவை அக்கம் பக்கத்தினர் திட்டினார்கள்.

நம் அம்மாக்கள் அத்தைகள் அக்க்காக்கள் சித்திகளுக்கு அந்த மாதவிடாய் முன் நிறுத்தப் பருவம் மாதவிடாய் நின்ற பருவத்தின் சவால்களால்தானே உளன்று கிடந்துருப்பார்கள்.

இன்றைய விஞ்ஞானமும் மருத்துவமும்

அதை reverse செய்வதற்கும்

அந்த சவால்களை எதிர்கொள்ளவும் மருத்துவம், மற்றும் உடற்பயிற்சிகள் அதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களே கட்டாயம் வருடம் அல்லது ஆறு மாதம் ஒரு முறை மகளிர் மருத்துவ நிபுணரிடம் முமு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அரசு மருத்துவமனைகளில் கூட பரிசோதித்துக்கொள்ளலாம்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *