சரி! நடைபெறுகிறன்ற போராட்டங்கள் கூட ஈகோவை அடிப்படையாகக் கொண்டவைதானே!அதனால் எந்த மாற்றமும் நிகழுமா?என்று கேட்டால் “நிகழாது”
என்பதுதானே உடனடி பதில்.
மத்திய கல்வி மந்திரியை ராஜினாமா செய்யச் சொல்லி தூக்கம் மறந்து,
தொல்லை பட்டு,அடி பட்டு,மிதி பட்டு,காலொடிந்து,கையொடிந்து கஷ்டப்பட்டு ராஜினாமா செய்ய வைத்தார்கள் இளைஞர்கள்!அதற்குப் பதிலாக விதிகளில் மாற்றங்கேட்டுப் போராடியிருந்தால் ஓரளவுக்காவது சமுதாயத்தினருக்கு ஏதாவது நல்லது நடந்திருக்கும்.அதில் முந்திக் கொண்டு நின்றது ஈகோதானே!ஆட்சியாளர்களின் ஈகோ ராஜினாமா செய்யக் கூடாது என்பது!போராட்டக்காரர்களின் ஈகோ ராஜினாமா செய்ய வைப்பது.ஈகோவில்
ஜெயிக்க இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா?கிடைத்த பயன் என்ன?
இப்பொழுது ‘சீப் எலக்ஷன் கமிஷனர்’ ராஜினாமாவைக் கோருகிறார்கள்.அவர் போனால் வேறொருவர் வரப் போகிறார்.போகாவிட்டால் ஆளுங்கட்சி ஈகோ வெல்லும்;போனால் ஆர்ப்பாட்டக் காரர்களின் ஈகோ வெற்றி பெறும்!வேறு என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது?
தற்பொழுது தேர்தல் ஆணையம் சில மாற்றங்களைச் செய்ய முன் வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிப்பதிலிருந்தே,தவறுகள் நடந்தது ஊர்ஜிதமாகிறது.தேர்தல் ஆணையர்களும்,மத்தியச் செயலரும் தேர்தல்கள் நடைபெறும் முன்னரே இக்குறைகளைப் பொது வெளியில் தெரிவிக்காதது ஏனென்று தெரியவில்லை.
மக்களில் பலரும் பல கட்சி ஆதரவாளர்களாக இருப்பது சரி!ஆனால் அவர்களின் தலைவர்கள் என்ன தவறு செய்தலும் அதற்கு ஆமாம் போடுவதுதான் சாதாரணமானவர்களின் ஈகோ!எங்கள் கட்சித் தலைவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களைத்தான் ஆதரிப்போம் என்ற ஈகோ!
வயிற்று வலி இருக்கையில் ஒட்டிக்கொள்ளும் கூட்டணிகள்,பதவி என்று வருகையில் ஈகோ காரணமாகப் பிரிந்து விடுகின்றன.இதைத்தானே நாம் இவ்வளவு காலமும் பார்த்து வருகிறோம்!
பழையவர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.புதியவர்களும் அவற்றையே மேற்கொள்கிறார்கள்.ஈகோவை விட்டு இந்திய அரசியல்வாதிகள் மாறினால்தான்
மக்கள் நலம் பெறுவார்கள்!விடுவார்களா ஈகோவை என்று பார்ப்போம்!
-ரெ.ஆத்மநாதன்,
புளோரிடா.