“மாநிலத்தில் போட்டி, தேசிய அளவில் கூட்டணி சாத்தியமே” – கார்த்தி சிதம்பரம் சொல்வது என்ன?| Karti Chidambaram has spoken about the conflict between the DMK and the Congress.

Spread the love

மாநில அளவில் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவினாலும், தேசிய அளவில் நாட்டின் நலன் கருதி ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவில் காங்கிரஸும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் மாநில அளவில் எதிரெதிர் துருவங்களாகப் போட்டியிட்டாலும், தேசிய அரசியலில் இணைந்து செயல்படுகின்றன. அரசியல் முதிர்ச்சியோடு அணுகினால் மாநில அளவில் போட்டியிட்டுக்கொண்டே, தேசிய அளவில் ஒத்துழைப்பை நல்க முடியும்.

ஸ்டாலின், ராகுல் காந்தி

ஸ்டாலின், ராகுல் காந்தி

அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட SIR நடவடிக்கை, ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான அனுபவமும் தாக்கமும் வெவ்வேறு விதமாக உள்ளன. மேற்கு வங்கம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்-ன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் அதன் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உணரப்படுகிறது. காங்கிரஸ் ஒரு அகில இந்தியக் கட்சி என்பதால், அனைத்து மாநில நிலவரங்களையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளது. ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படும் மாநிலக் கட்சிகளுக்கு இதன் முழுமையான வீச்சு உடனடியாகப் புரிய வாய்ப்பில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *