“மாநில உரிமைகளுக்காக கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக, ஆனால்.!”- சசி தரூர்|Shashi Tharoor takes dig at DMK over delimitation

Spread the love

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவிற்கு திமுக நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக நேற்று (நவ. 28) திருவனந்தப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். மாநில உரிமைகளுக்காகக் கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக.

சொல்லப்போனால், இந்த ஆண்டு வரை ஆட்சியிலிருந்த திமுக, தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க டெல்லியை அனுமதிக்கக் கூடாது என்பதற்காக, ஜவஹர் நவோதயா பள்ளிகளைக்கூட மாநிலத்திற்குள் அனுமதிக்கவில்லை.

அப்படிப்பட்ட ஒரு கட்சி, “விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதிகள் அதிகரிக்கப்படுகின்றன’ என்ற மேலோட்டமான காரணத்தை நம்பி, அதன் பின்னணியில் இருக்கும் பாஜகவின் மெகா அஜெண்டாவைப் பார்க்காமல் சரணடைவது, எந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தவறுவதாகும்.

எனக்குப் பெரும் ஏமாற்றம்தான். திமுகவில் எனக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அவர்களுடன் இணைந்து பணியாற்றிய நல்ல அனுபவமும் உண்டு. ஆனால், இப்போது அவர்கள் எடுப்பதாகச் சொல்லப்படும் இந்த நிலைப்பாட்டை, திமுகவின் எந்தவொரு உண்மையான திராவிடத் தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *