மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது: “திமுக-வினரை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்ற நோக்கில்” – ஆர்.எஸ். பாரதி | R.S. Bharathi has stated that the arrests are being aim of causing mental distress to DMK.

Spread the love

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடி சிறைச்சென்ற பாரம்பர்யம் கொண்ட தி.மு.க, இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சாது.

ஜனநாயகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த இந்த 60 நாட்களிலேயே சகிப்புத்தன்மை அறவே இல்லை என்பதை நிரூபித்துவிட்டது.

பிற கட்சிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களது பக்கம் இழுக்கும் இந்த அரசு, தி.மு.க-வில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வைரத்தைப் போன்ற உறுதிமிக்க தொண்டர்களாக இருப்பதால் அவர்களை மாற்ற முடியாது என்ற காரணத்தால், இது போன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மார்க்கண்டேயன்

மார்க்கண்டேயன்

அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து இரண்டாவது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க-வினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே கைது செய்கிறார்கள். நீதிமன்றத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரங்களைச் சட்டரீதியாக எதிர்கொள்ள தி.மு.க தயாராக இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டிய காவல்துறை, அதற்கு நேரமில்லாமல் தி.மு.க-வுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கல்லூரி இளைஞர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நள்ளிரவில் சென்று அச்சுறுத்தி வருகிறது.

மேலும், ஊடக விமர்சகர் விஜயன் போன்றவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத ஒன்றாகும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *