பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த எஸ்.பி. தேவநாதன், “இப்பகுதியில் இரவு பகலாக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரி பற்றிய புகார் எழுந்ததால் இங்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்து கல்குவாரி உரிமையாளர்களின் ஆவணங்களையும், உள்ளூர் காவல் நிலையத்தில் குவாரி குறித்த ஆவணங்களையும் சரிபார்க்க வந்ததாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இதுபோன்று சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளைப் பற்றிய தகவல்களை உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமோ, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, காவல்துறை எஸ்.பி அலுவலகத்திலோ, என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கோ, 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.
ஆவணங்களை சரிபார்க்க வந்ததாக கூறிய மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வுக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களோ பணியாளர்களோ, வருவாய்த் துறையினரோ இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், கனிமவளத்துறை அமைச்சர் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளின் மீது விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என கூறியதையடுத்து, எஸ்.பி. ஆய்வு செய்த குவாரி சட்டவிரோதமாக செயல்படுகிறதா? என கனிமவளத்துறை தலைமையிலான குழு ஓர் ஆய்வினை நடத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.