மாவட்டம் முதல் கிளை வரை மாற்றம் – திமுகவில் என்ன நடக்கிறது?|New Rules in DMK: Two-Term Cap, Age Limits for Leaders

Spread the love

தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று – திமுக சீனியர்கள் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாததே ஆகும்.

இந்த மாதிரியான குறைகளைக் கண்டுபிடிக்கக் குழு ஒன்றை அமைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, இன்று (ஆகஸ்ட் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஸ்டாலின் - திமுக

ஸ்டாலின் – திமுக

>‌ கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

> சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திடக் கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *