மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: ‘இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?’- எடப்பாடி |edappadi slams tvk vijay in mla arul vignesh issue

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது.

எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர்.

அந்த ஆட்சியர் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! கேவலம்.

ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார், அவருக்கே நீதி இல்லை என்றால்,

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? முதல்வர் விஜய் பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா?

“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர், மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி “ஆபாச அர்ச்சனை” செய்து அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர், எல்லாவற்றிற்கும் மேலாக “ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்” அனுப்பிய MLA என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *