“மின்சாரக் கொள்முதல் முதல் சாலை டெண்டர் வரை: இது டம்மி அரசு” – எடப்பாடி பழனிசாமி காட்டம்|”From electricity procurement to road tenders: This is a dummy government” – Edappadi Palaniswami lashes out.

Spread the love

கடந்த நான்கு மாதங்களாகத் திட்டமிட்டே மின்சாரம் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தி, மாநிலத்தில் கடுமையான மின்வெட்டை ஏற்படுத்தி, எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற அவசரச் சூழலை மக்களுக்குச் செயற்கையாக உருவாக்கிய பிறகே, தடையற்ற மின்சாரம் வழங்குவது என்ற சாக்கில் இந்த அதிக விலை கொள்முதல் டெண்டர் விடப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலமும் செய்யாத அளவிற்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டிருப்பது ஒரு மிகப்பெரிய மெகா ஊழல். மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், அது ஜனநாயகப்பூர்வமான வெற்றி அல்ல. தாராபுரத்தில் கடந்த முறையை விட 20,000 வாக்குகளும், மதுராந்தகத்தில் 10,000 வாக்குகளும் மட்டுமே கூடுதலாகப் பெற்ற தவெக-வுக்கு மக்களிடையே பெரிய செல்வாக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.

சொந்தக் கட்சியில் முறையான கிளைகளோ, அடிப்படை நிர்வாக அமைப்புகளோ இல்லாத காரணத்தினாலேயே, சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பியிருக்கும் தவெக, 20-30 ஆண்டுகளாக உழைத்த அதிமுக கிளைச் செயலாளர்களையும் ஒன்றியச் செயலாளர்களையும் இழுக்க “குதிரை பேரத்தில்” ஈடுபடுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *