9.உலகத்தில் இல்லாத அப்பா!
நிக்கோலஸ் இதற்கு முன் இரண்டு முறை வந்தபோதும், அவசர அவசரமாக காரில் போனில் பேசிக் கொண்டே வந்து போனது ஞாபகம் வந்தது.
இனியா பார்ப்பது மனதால்; கண்களால் அல்ல, செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் பல புதிய தடயங்களைச் சேகரித்தார் இனியா. அதில் முக்கியமானது அவளுடைய ஆராய்ச்சி. அது பற்றி மேலும் அறிய அவள் தங்கியிருந்த இடத்திற்குப் போக விரும்பினார்.
“வாங்க, வாங்க… அதுவும் எனக்குத் தெரியும், பார்த்ததுதான்!”
அடுத்தது அதுதான் என்கிற தன் அனுமானம் சரியானதில் சந்தோஷமான நிக்கோலஸ் அழைத்துச் சென்றார். கொஞ்ச தூரம் நடந்த பின் தென்பட்டது ஹாஸ்டல்.
அங்கே இருந்த ஹாஸ்டல்கள் இரண்டு பெட்ரூம், ஒரு ஹால் என்று சகல வசதிகளோடு இருந்தன.
நுழைந்த உடனே அவரது கண்களில் பட்டது புத்தக அலமாரிதான்.
‘நோ செல்ஃப்… நோ பிராப்ளம்!’
கிறிஸ் நிபாயர் புத்தகம் வெள்ளை அட்டையுடன் இனியாவை வரவேற்றது.
அதனருகே ஒரு தாள் இருந்தது. விளம்பரத் தாள்.
நிக்கோலஸ் மூளையில் சட்டென ஒரு பல்ப் எரிந்தது.
“உங்களிடம் அந்தத் தடியன் சொன்ன ‘எலெக் லிஸ்’ என்பது ‘எலக்ஷன் லிஸ்ட்’ ஆக இருக்கலாமோ..? இங்கே பாருங்க, ஸ்டூடண்ட் பிரஸிடென்ட் தேர்தல் ஓட்டு கேட்டு வந்திருக்கிற அட்வர்டைஸ்மென்ட் ஷீட்!” என்று மேஜை மீது இருந்த விளம்பரத் தாளை காட்டினார் நிக்கோலஸ்.
“இருக்கலாம்!”
புத்தக அலமாரியில் உள்ள எல்லாப் புத்தகங்களையும் இறக்கிய பல்கலைக்கழக நுழைவாயில் ஆர்ச் சமீபத்தில் பெய்த மழையால் கழுவப்பட்டு நிக்கோலஸின் மனது போல பளிச்சென்று பளபளத்தது.
இனியா மாதிரியான ஒரு ஆஃபீஸரோடு பணி புரிவது ஒரு மேஜிக்கல் எக்ஸ்பீரியன்ஸாக நிக்கோலஸுக்கு இருந்தது. அன்றைக்குப் பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன்கிழமை.
இனியா ஒரு அறிவியலறிஞர் போல ஆராய்ச்சி செய்கிறார்; இசையமைப்பாளர் போல சம்பவங்களைக் கோர்க்கிறார்; ஓவியர் போலப் புரிந்துகொள்ளச் செய்கிறார்.
“என்ன நிக்கோலஸ்… ரொம்ப நேரமா ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்க! என்னைத் தாக்கியவன் சொன்ன வார்த்தைகள் எலெக் லீஸ்’. அது என்னவாக இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள்..?”
பல்கலைக்கழக வாசலிலேயே பேராசிரியர் மேக்ஸ்வெல் அவர்களுடன் சேர்ந்தார்.
மாணவர்களால் பெயர் வாங்கும் கைடுகள் உண்டு; கைடுகளால் பெயர் பெறும் ஸ்டூடண்ட்டுகள் உண்டு. இதில் மேக்ஸ்வெல் முதல் ரகம்.
ஸ்ரேயா கோஷல் வாய்ஸில் இனியா மேக்ஸ்வெல்லுக்குப் பின்வருமாறு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்… “மிஸ்டர் மேக்ஸ்வெல்… ஐ’ம் இனியா. இந்திய போலீஸ் அதிகாரி.”
கார் என்ட்ரன்ஸ் தாண்டி உள்ளே சென்றது. சற்றுத் தூரத்தில், காரை நிறுத்தி, அவள் லேப் இருக்குமிடத்திற்குச் சற்று முன்பு இறங்கி நடந்தார்கள்.
பிறகு, பின்னால் இருந்த ஹெல்மெட் மாதிரியான ஒரு கறுப்பு கம்ப்யூட்டர் வஸ்துவைக் காட்டி, “இது என்னங்க மேக்ஸ்வெல்…” என்று கேட்டார் இனியா.
ஒரு ஹெல்மெட்டை வைத்துத்தான் யாரோ அதை வடிவமைத்திருக்க வேண்டும். சுருள் சுருளாக ஒயர்கள் இருந்தன. கண்கள் இருக்கிற இடத்தில் இரண்டு பச்சை நிற மானிட்டர்கள், உதடுகள் வருகிற இடத்தில் இரண்டு மோல்டுகள் இருந்தன. அது சில்வரில் இருந்தது. அதில் இருந்து ஒரு கம்பி மூலம் ஹெல்மெட்டின் பகுட்டோடு இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. மூன்று ஆன்ட்டெனா போன்ற நீட்சிகள். பார்க்கவே கொஞ்சம் அமானுஷ்யமாக இருந்தது.
“ஆஹா… புக் செல்ஃப் என்று நினைத்தேனே… ‘நோ செல்ஃப்’ என்று போட்டிருந்த போதே யோசித்திருக்க வேண்டும். ஆனாலும், இந்தக் காயலான் கடை ஹெல்மட்டை வெச்சு என்ன பண்ணியிருந்திருப்பா சில்வியா.? கண்ட இடத்துல ஒயர சொருகி இவங்க வெளையாட்டுக்கு நான்தான் ஊறுகாயா?” என்றார் நிக்கோலஸ்.
அந்த கம்ப்யூட்டர் ஹெல்மெட்டை வினோதமாகப் பார்த்தார். அந்த உயிரற்ற வஸ்து தன் வெள்ளி உதடுகளால் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது.
நிக்கோலஸ் அவசரமாக முகத்தைத் திருப்பிக்கொண்டபோது…
“ஆஹா… இது இங்கேதான் இருக்கிறதா? இது சில்வியாவின் லேட்டஸ்ட் புராஜெக்ட். இந்த எக்விப்மென்ட் எங்க லேபில்தான் இருந்தது. இது எப்படி இங்கே வந்தது என்று தெரியலை…” என்ற மேக்ஸ்வெல் தொடர்ந்தார்…
“இதன் பெயர் ‘மின்சார உதடுகள்’.

