மின்சார உதடுகள்-கேட்காதீங்க,சொல்வேன்! – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle

Spread the love

சில வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது சில்வியா ஸ்கூலில் ப்ளஸ் டூ படித்தாள். ஒரு ஹாக்கிப் போட்டிக்காக ராதிகாவும் சில்வியாவும் ஷில்லாங் வந்திருந்தார்கள். தமிழ்நாடு அணியில் சில்வியா ஆடுகிறாள். அவள் கிளம்பத் தயாராகிறாள்.
கூடவே, இனியா ஆன்ட்டியும் வருவதாக இருந்தது. வி.ஐ.பி. பந்தோபஸ்து காரணமாகக் கடைசி நேரத்தில் அவங்க வரலை. ராதிகா அம்மா காலையில் அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்து அமைதியாக அமர்ந்திருந்தார்.
ஹால் எல்ராடின் ‘மார்னிங் மிராக்கிள்’ புத்தகம்.
சில்வியா பரபரப்பாக இருக்கின்றபோதெல்லாம் ராதிகா அமைதிப்படுத்துவார்.
தன்னுடைய ஹாக்கி ஸ்டிக்ஸ் கலெக்ஷனிலிருந்து இரண்டை எடுத்து கிட்பேக்கில் வைத்தாள். ஃபேஸ் மாஸ்க்… (கார்னர் அடிக்கும் போது டிஃபெண்ட் பண்ண தேவை) அப்புறம் எல்போ கார்டு எல்லாம் எடுத்தாள்.
“என்னோட ட்ராக் சூட் எங்கேம்மா? லைன் அப்ல யூனிஃபார்மோடு நிக்கணுமே!”
கண் முன்னாடி இருக்கிற எதுவும் கண்ணுக்குத் தெரியாத மாதிரி சில்வியா அலை பாய்ந்தாள்.
இப்படி எவ்வளவோ முறை சின்னச் சின்ன சீறல்களையும் பூகம்பத்தையும் வீட்டில் பார்த்திருந்த ராதிகா கொஞ்சம்கூட அலட்டிக்காமல் பதில் சொன்னார்… “நேற்றிரவு ஒரு டெக்னிகல் புராஜெக்ட்டுக்காகக் கண்விழித்து கம்ப்யூட்டரில் வொர்க் பண்ணப்ப அந்த டிரெஸ் போட்டிருந்தே. குளிக்கும்போது பாத்ரூம்ல விட்டிருப்ப, பார்!”

ராதிகா எல்லாவற்றையும் கவனித்திருந்தார்.
ஒரு நாளைக்குச் சில நிமிடங்களாவது வஜ்ராசனத்தில் அமரச் சொல்வார் ராதிகா. அப்படி அமர்ந்தால் பொறுமை வரும் என்பார்.
ராதிகாவிற்கு மின்சார உதடுகளைப் பற்றிச் சொல்லக்கூடிய வாய்ப்பு அன்று மாலை கிடைக்கும் என்பது அப்போது தெரியாது.
அன்றைக்கு, மாலை 6 மணிக்கு துவண்ட பூமாலை போல் வந்தாள் சில்வியா. ஹாக்கியில் தோற்றதால் வருத்தப்பட்டாள்.
ராதிகா, சில்வியாவிற்கு உதவி செய்தார்.
இரண்டாவது ஷூவை ரிமூவ் செய்தார். சாக்ஸ் தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. அது ட்ராக் சூட்டுக்குள்ளே இருந்தது. ஒரு நிமிஷம் அப்படியே விட்டுவிடலாமா என்று யோசித்தார் ராதிகா.
“நோ நோ… இவ்ளோ வெட்னஸ்… தப்பு!” அவர் மனசு சொன்னது.
கைகளைப் பேன்ட்டுக்கும் சாக்ஸுக்கும் இடையே நுழைத்தபோது, அப்படியே எழுந்து அமர்ந்தாள் சில்வியா.
“எட்டு கோல்மா!”
தான் சொன்னதையே திரும்பத் திரும்பப் பேசினாள் புலம்பல் மாதிரி.
“தங்கம்… நான் ஒரு கத சொல்ட்டா?” ஸ்ட்ரெய்ட்டாகக் கேட்டார் ராதிகா.
சில்வியாவுக்கு இது புதுசாக இருந்தது. அப்படியே திரும்பி, அழுதிருந்த கண்களால் பார்த்தாள்.
“சொல்லுங்கம்மா!”
“ஒரு ஊரில் ஒரு போர் வீரர் அல்லது வீராங்கனை இருந்தாள்! நிஸர்கதத்த மஹராஜ் ஜெண்டர் டிஃப்ரன்ஸ் இல்லன்னு சொல்லிருக்கார்… யாரோ ஒருத்தர்னு வெச்சுக்கோ!”
மிகப் பெரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார் ராதிகா…

“ராணி லட்சுமிபாய், மங்கம்மா டைப்ல, ஜோன் ஆஃப் ஆர்க் மாதிரி ஒரு போர்ல சண்டை நடந்தது. அதாவது, பேட்டில் இன்எ வார். அப்பொழுது அந்த வீராங்கனையின் இடது தோளில் ஒரு அம்பு தச்சது. இரும்பு அம்பு தசையில் பாஞ்சுது. இதயத்தைத் தொடல… ரத்தம் வருது. அவங்க அப்படியே கீழ அமர்ந்து அதை வலது கையால பிடுங்கி எடுக்கறாங்க. பயங்கர வலி. ஆனா அவங்க அந்த இரும்பு அம்பை வைத்து மறுபடியும் தன் நெஞ்சில் அது குத்திய இடத்துலயே இன்னொரு குத்து குத்தினாங்க. ‘ஆ..’ ன்னு கத்தினாங்க. அப்படியும் மறுபடி எடுத்து மறுபடி ஒரு குத்து…”
“அச்சச்சோ..” என்று இந்த முறை சில்வியா பதறினாள்.

“தங்கம்… இது புத்தர் சொன்ன கதைம்மா! அதிர்ச்சியான, கவலை தரும் சோகமான செய்திகள் ஒரு அம்பு போல நம் மீது சில வேளை பாய்ந்து விடலாம். அதைத் தடுக்க முடியாது. முதல் முறை எதிர்பாராமல் வெளியில் இருந்து வருகிறது. ஆனால், நாம் அதைப் பற்றி மறுபடி மறுபடி நினைத்தால், அது மீண்டும் அதே அம்பால் நம்மை நாமே மறுபடி குத்திக்கொள்வது போலத்தான். இரண்டாவது முறை குத்துவது நாமேதான். அதைத்தான் இந்தக் கதையின் மூலம் சொல்கிறார் புத்தர். ‘நடந்ததையே நினைத்திருந்தால்’ மனது திரும்பத் திரும்பக் குத்தும். அன்று மைதானத்தில் நடந்ததையே நீ நினைத்திருப்பதால் ஹோட்டல் ரூமுக்கு மன ஒருமைப்பாட்டுடன் இன்னும் நீ வந்து சேரவில்லை!” என்றார் ராதிகா.
“மாம்… கிரேட்..! எப்படிம்மா இப்படிச் சரியான கதையை சரியான வேளைக்குச் சொல்ல முடியுது உங்களால..?”
வியந்த சில்வியாவிடம் ராதிகா சொன்னது…
“அதற்கு ‘மின்சார உதடுகள்’ வேணும்மா!”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *