11.மனசு
‘மின்சார உதடுகள்’ எனத் தொடங்கி, மேக்ஸ்வெல் சொன்னது சயின்ஸ் ஃபிக்ஷன் கதை மாதிரி இருந்தது. அன்றைக்குத் தேதி 26.8.25
“மனிதர்களில் மூளை என்று ஒன்று மண்டைக்குள் உள்ளது என எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதில் மனசு என்று ஒன்று எப்படி உருவாகிறது?” என்று சில்வியா தேடினாள்.
“மனசு என்றால் என்ன?” சீரியஸாக, உலகின் முக்கியமான கேள்வி கேட்டார் மேக்ஸ்வெல்.
“மனசை சின்னச் சின்னதா உடைச்சா வருகிற சின்னத் துண்டுகள் மெமரி என்கிற ஞாபகங்கள். அவற்றை ஒன்றாகச் சேர்த்தால் சுயநினைவு என்கிற கான்ஷியஸ்னெஸ் வரும்! மனசை, மொத்த நினைவுகள் எனலாம்.”
நிக்கோலஸ் சில்வியாவின் ஹாஸ்டல் வீட்டுக்குள் சென்று மஹிமாவின் அறையைத் திறந்தார். உள்ளே, ஒரு நாற்காலியில் ஒரு பெண் கட்டிப் போடப்பட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்தார். பார்ப்பதற்கோ வயதான சில்வியா மாதிரி இருந்தார்.
நிக்கோலஸ் அதிர்ச்சியோடு திரும்பி இனியாவை அழைக்கலாம் என்று நினைத்தார்.
அப்போது..
