தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின்வெட்டு பிரச்சனை அதிகமாக இருந்து வருகின்றது,இதனால் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதைப் பற்றி மின்சார துறையிடம் விளக்கம் கேட்டால் இதற்கு முன்னால் திமுக அரசு மின்சார துறையை பல மடங்கு கடன் சுமையில் வைத்துள்ளதாகவும். இது குறித்து முழு தகவலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிப்போம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மின்சாரத்தின் அளவு, அதற்கான செலவினங்கள் மற்றும் மின் வாரியத்தின் கடன் சுமை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய விரிவான வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை நாளை காலை 10.30 மணி அளவில் வெளியிடப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிக்கை வெளியிடுவதன் நோக்கமானது தமிழக மின்சார வாரியம் கடந்த சில நாட்களாகவே பெரும் நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் இருந்து வருவதாகவும் மின்சார துறையில் திமுக அரசு செய்த ஊழலையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் நிதி நிலை குறித்து நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். ”இது விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட வெற்று அறிக்கை; யாரை காப்பாற்றுவதற்காக இந்த வெள்ளை அறிக்கை” என திமுக.,வை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்து இருந்தார்.
மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வெள்ளை அறிக்கையை சட்டசபையில் தான் வெளியிட வேண்டும். சட்டசபைக்கு வெளியே வெளியிடுவது மரபுல்ல என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மின்சார துறைக்கான வெள்ளை அறிக்கையும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.



