மீசைய முறுக்கு 2: “ஆதி என் தம்பி!” – சுந்தர். சி | Meesaya Murukku 2: “Proud Like a Mother” – Director Sundar C Praises Hiphop Tamizha Adhi

Spread the love

“ஹிப் ஹாப்’ தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகியோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் சக்சஸ் மீட், நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

‘மீசைய முறுக்கு 2’

‘மீசைய முறுக்கு 2’

இந்த நிகழ்வில் இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சுந்தர்.சி பேசுகையில், “கிட்டத்தட்ட 13, 14 வருஷத்துக்கு முன்னாடி, ஒரே ஒரு சுயாதீன பாடலுக்காக சென்னைக்கு வந்த ஓர் இளைஞன், இன்னைக்கு நாடே போற்றும் அளவுக்கு ஒரு ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.

எல்லாரும் அவரை ‘ஆதி அண்ணா’ன்னு கூப்பிடுறதைப் பார்த்தா, போற போக்குல நானே அவரை ‘ஆதி அண்ணா’ன்னுதான் கூப்பிடணும் போல இருக்கு (சிரித்துக்கொண்டே…).

அந்த அளவுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாம, தமிழ்ப் படங்கள் திரையிடப்படுற உலகத்தின் அத்தனை திரையரங்குகளிலும் ‘ஆதி அண்ணா’ங்கிற கோஷம் ஒலிச்சுட்டு இருக்கு. என் தம்பியோட இந்த வளர்ச்சியைப் பார்த்து நான் படுற பெருமை, ஒரு தாய் அடையற மகிழ்ச்சிக்கு எந்த விதத்திலும் குறைஞ்சது இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *