1. நிதானமும், திட்டமிடலும் அவசியமான காலம் இது. மற்றவரை நம்பி முக்கிய பொறுப்புகளைக் கொடுக்காதீர்கள். குடும்பத்தில் எல்லோரின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
2. அதிக லாபம் கிடைக்கிறதே என அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யவேண்டாம். பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம்; வீண்பழிகள் அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும்!
3. குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். உங்களின் செல்வாக்குக் கூடும்.
4. குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், அம்மாவின் உடல் நிலை சீராகும். அவர் வழிச் சொத்து கைக்கு வரும். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாக பெரிய மனை வாங்குவீர்கள். வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். என்றாலும் உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும்.
5. குருபகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பண வரவு, அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் கூடாது. திடீர்ப் பயணங்கள் கூடிவரும். அதன்மூலம் ஆதாயமும் உண்டு. அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

6. குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதேபோல் அவர் சனி பகவானின் நட்சத்திரத்தில் செல்லும் 18.06.26 முதல் 19.08.26 வரையிலான காலத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். இழந்த தொகை கைக்கு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள்.
7. குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் சின்னச் சின்ன பிரச்னைகள் வரத்தான் செய்யும். விட்டுக்கொடுத்துப் போங்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றும்பொருட்டு கையிருப்பு கரையக்கூடும்.
8. பண விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் செலவுகள் கூடும். எவருக்கும் எதன்பொருட்டும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
9. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. கொடுக்கல் – வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டியவற்றை முறையே செலுத்திவிடுங்கள். உணவு, கமிஷன், வாகன உதிரிபாகங்கள் மூலம் லாபம் உண்டு.
10. உத்தியோகத்தில், மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.