
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்ததால், நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய விலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,300-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையிலும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் ரூ.10,000 உயர்ந்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
தொடர்ச்சியாக விலை ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவதால், நகை வியாபாரிகளும், முதலீட்டாளர்களும், பொதுமக்களும் சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.