மீனம் ராசிக்கான சனி வக்ர பலன்கள்! – யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ – Kumudam

Spread the love

மீனம் ராசி பலன்கள்:

சனிபகவான், உங்க ஜன்ம ராசியிலயே வக்ரகதி அடையறார்ங்க. இது, எதிலும் நிதானமும் நேர்மையும் இருந்தா, நடப்பவை எல்லாம் நல்லவையாகவே இருக்கும் என்பதைக் குறிக்கும். அமைப்புங்க

பணியிடத்துல உயர்வுகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கும்க. மறைமுக எதிரிகளின் சூழ்ச்சியால இழந்திருந்த நிம்மதி திரும்பக் கிடைக்கும்க. மேலதிகாரிகள் பாராட்டும் உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பும் மனதுக்கு மகிழ்ச்சி தரும்க. இந்த சமயத்துல திட்டமிடலும் நேரம் தவறாமையும் இருந்தா, எதிர்காலம் பிரகாசமாக வழி பிறக்கும்க. இடமாற்றம் வந்தா தவிர்க்க வேண்டாம்க

வீண் ரோஷம் தவிர்த்தா, வீட்டுல விசேஷங்கள் அணிவகுத்து வரும்க வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்பு மறையும்க விரிசல் விட்டிருந்த சிலரது வாழ்க்கைல மறுமண வாழ்வு அமைஞ்சு மகிழ்ச்சி திரும்பும்க உறவுகள் தட்புகளிடையே உங்க செல்வாக்கு உயரும்க. வாழ்க்கைத்துணை உடல்நலத்துல கூடுதல் அக்கறை காட்டுங்க வரவை சேமிக்கப் பழகுங்க. விசேஷங்கள்ல நிதானத்தைக் கடைபிடிங்க. யாருக்கும் வாக்குறுதி தருவதைக் தவிருங்க

செய்யும் தொழில்ல முயற்சிகளுக்கு உரிய வளர்ச்சி ஏற்படும்க சோம்பல்பட்டு முடங்கினா முன்னேற்றமும் முழுமையாக முடக்கிப் போயிடும்க புதிய ஒப்பந்தங்களை கவனமா படிச்சுட்டுக் கையெழுத்திடுங்க பணப் பரிமாற்றத்தை உடனுக்குடன் குறிச்சு வையுங்க

அரசியல், அரசுத் துறைசார்ந்தவங்க, திறமைக்கும் உழைப்புக்கும் உரிய அங்கீகாரமும் பாராட்டும் பெறலாம்.க. சிலருக்கு பதவி, பாராட்டு, முன்னேற்றம் சட்டுன்னு கைகூடும்க வஞ்சப் புகழ்ச்சிக்கு மயங்காம இருந்தா மேன்மைகள் நிலைக்கும்க

பெண்களுக்கு, ஆனந்தமான செய்திகள் அணிவகுத்து வர ஆரம்பிக்கும்க வாரிசுகள் வாழ்க்கைல வசந்தம் வீசும்க. அக்கம்பக்கத்து விஷயங்கள்ல அநாவசியமா மூக்கை நுழைக்க வேண்டாம்க பெரியவங்க ஆலோசனை கேட்டா. சுபகாரியங்கள் கைகூடும்க. விடுபட்ட முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்யறது நல்லதுங்க. ஆடை, ஆபரணத்தில ஆடம்பரத்தைத் தவிர்க்கறது நல்லதுங்க

மாணவர்கள் எதிர்பார்த்த வெளிநாட்டுக் கல்வி, உயர்கல்வி வாய்ப்புகள் நிச்சயம் கிட்டும். கலை படைப்புத் துறையினர் முயற்சிக்கு உரிய மேன்மையை அடையக் கூடிய காலகட்டம்க. ரகசியங்களை உங்க நிழல்கிட்டேகூட பகிர்ந்துக்க வேண்டாம்.

தொலைதூரம் வாகனத்தை ஓட்டிச் செல்றவங்களுக்கு, இடையிடையே போதுமான ஓய்வு அவசியம்க காது. மூக்கு, தொண்டை, கழுத்து, நரம்பு உபாதைகள் வரலாம்க. ஐம்பது வயதைக் கடந்தவங்க ஒருமுறை முழு உடல்பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க

வியாழக் கிழமைகள்ல இஷ்டப்பட்ட மகானை வணங்குங்க. முடிஞ்சா ஒருமுறை திருச்செந்தூர் சென்று திருமுருகளை தரிசனம் செய்துட்டு வாங்க. வாழ்க்கை செழிக்கும், மணக்கும்

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *