“தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா’ என்ற பெயரில் தவெக சார்பில் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்டளவில் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே தவெக சார்பில் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சி கல்வியாளர்கள் மத்தியில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர்கள் சிலர், ‘மதிப்பெண் அடிப்படையில் மாணவ மாணவிகளை முதலிடம், இரண்டாமிடம் என தரவரிசைப்படுத்துவது தவறான முன்னுதாரணமாகும். இப்படி தரவரிசைப்படுத்தி முதல் மூன்றிடம் பிடித்த மாணவர்களை மட்டும் ஊடக வெளிச்சம் கிடைக்கும் வகையில் பாராட்டி பரிசளிப்பது மற்ற மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும்.