சோனம் வான்சுக், தி.மு.க-விற்கும் அதன் தலைவருக்கும் நன்றி தெரிவித்தார். அவருடன் உண்ணாவிரதம் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடமும் தி.மு.க தலைவர் சார்பில் ஆதரவு பகிர்ந்துகொள்ளப்பட்டது. நாடாளுமன்றம் கூடும் போது, நீட் விவகாரம் மற்றும் தமிழகத்தின் முக்கியப் பிரச்னையான மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பிரச்னைகள் குறித்து தி.மு.க மிக வலுவாகக் குரல் எழுப்பும்.
போராட்டத்தைக் கைவிடுமாறு சோனம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், “எனது உயிர் முக்கியமல்ல; எனது இறப்பின் மூலமாவது இந்த அரசின் கண் திறந்து, மண்ணில் எழுச்சி ஏற்படும் என்றால், என் உயிரைத் தரவும் தயாராக இருக்கிறேன்” என்று அவர் உறுதியுடன் கூறியுள்ளார். இவ்வளவு தீவிரமான போராட்டத்திற்குப் பிறகும் மத்திய மோடி அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்குமானால், தேச அளவில் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.” என்றார்.