முதலமைச்சர் விஜய் Rocked… மேயர் ப்ரியா Shocked..! – Kumudam

Spread the love

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் ஆர். பிரியா முன்னிலையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே அவசரமாக டெண்டர்கள் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பே இறுதி ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த போதிலும், பணி ஆணைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் நிபந்தனைகள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதும், திட்ட மதிப்பீடு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பாக, வெறும் 500 மீட்டர் நீளமுள்ள சாதாரண சிமெண்ட் நடைபாதையை சீரமைப்பதற்கே பல கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இந்த விவகாரம், முந்தைய திமுக நிர்வாகத்தின் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் அரசியல் மற்றும் பொதுவெளி விவாதங்களுக்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட்டு, திருத்தப்பட்ட நிதி மதிப்பீட்டின் அடிப்படையில் விரைவில் புதிய மற்றும் வெளிப்படையான டெண்டர்கள் கோரப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *