நிறைய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் ஆங்காங்கே தற்காலிகமாக இயங்கி வருகிறது அரசு நிலங்களை அடையாளம் கண்டு ஷெட் போடுவதற்கான வேலையை தொடங்கவுள்ளோம். எங்கெல்லாம் கொள்முதல் நிலையங்கள் தனியார் இடங்களில் இயங்க வருகிறதோ அதனை கண்டறிந்து அதனை அரசு இடங்களுக்கு மாற்றவுள்ளோம்.
மதுரை மாநகராட்சியில் இப்போதுள்ள ஒப்பந்த நிறுவனம் பல முறைகேடுகளை செய்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்ய கூறியிருக்கிறோம். கடந்த மாதம் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நிறுவனம் மீது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய உள்ளார்கள்.
கழிவுமேலாண்மை தனியாரிடம் தான் கொடுத்தாக வேண்டும். ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்களை எந்த தொந்தரவும் செய்யப் போவதில்லை ; முன்பு உள்ளதையே பின்பற்றப் போகிறோம். மதுரை மாநகராட்சி பகுதியில் சாலைகள் மோசமாக இருப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விபரத்தையும் சேர்ப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்லவில்லை. செங்கோட்டையன் சொன்னது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சாதி சான்றிதழை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தான் சொன்னார்.
செங்கோட்டையன் சொன்னது போல, அப்படி எந்த திட்டமும் அரசுக்கு இல்லை. செங்கோட்டையன் அவசரத்தில் தவறுதலாக சொல்லி விட்டார்” என்றார்.