"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய் - புதிய தலைமைச் செயலகம்
முதல்வர் விஜய் – புதிய தலைமைச் செயலகம்

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். கண்டனங்கள் வலுத்த நிலையில் பட்டினம்பாக்கம் தலைமை செயலகம் விவகாரத்தில் முதல்வர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பதும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் பட்டினம்பாக்கம் தலைமை செயலகத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?

அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?

முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!

புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்
புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்

ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.

மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!” என்று திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *