‘முதல்வர் விஜய்-ன் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?’- துரைமுருகன் கேள்வி | ‘Why Is Vishnu Reddy Part of CM’s Andhra Visit?’ – Duraimurugan

Spread the love

முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் திமுக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை! நீர்வளத்துறை செயலாளர் எங்கே? ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை?

கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் விஜய் சந்தித்தாக தமிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் விஜயின் வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணங்கள் எதுவுமே வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. நதிநீர் பற்றி மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் எனில், இரண்டு முதல்வர்கள் தவிர சுற்றிலும் இரு மாநில நீர்பாசனத் துறை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

முதல்வரின் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டி

முதல்வரின் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டி

இரு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருக்கும் குழுப் புகைப்படம் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. அதில், தமிழக நீர்வளத்துறை செயலாளர் மற்றும் தமிழக அதிகாரிகள் யாருமே இல்லை. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா தவிர முதல்வர் விஜயின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிதான் பிரதானமாக அமர வைக்கப்பட்டிருந்தார்.

நீர்வளத்துறைச் செயலாளரை விட விஷ்ணு ரெட்டிக்கு அங்கே வேலை? விஜய் ஆட்சி அமைந்த பிறகு ₹4.42 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டது. அது குறித்து விவாதிப்பதற்காக இருக்குமோ என்று மக்கள் யோசிக்கிறார்கள்.

முதலமைச்சர்கள் சந்தித்த கூட்டத்தில் அதிகாரிகள் தயாரித்து கொடுத்த கிருஷ்ண நீர் தொடர்பான அறிக்கை எதையும் முதல்வர் வாசிக்கவில்லையே ஏன்? அப்படி வாசித்திருந்தால் அது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டிருக்குமே? நதிநீர் இணைப்பு தொடர்பான கடித்தத்தை முதல்வர் விஜய் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் அளித்திருக்கிறார். அதைக் கொடுக்க ஏன் ஆந்திரா போக வேண்டும். தமிழ்நாட்டில் இருந்தே போஸ்ட் செய்திருக்கலாம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *