முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: இலங்கை வீரரை தாக்க முயன்ற வைபவ் சூர்யவன்ஷி, வைரலாகும் அதிர்ச்சி வீடியோ  – Kumudam

Spread the love

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்தியா, இலங்கை ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி, இந்திய ஏ அணியை போட்டிங் செய்ய அழைத்தது. 49.2 ஒவர்கள் முடிவில் இந்திய ஏ அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து, 265 ரன்களை எடுத்தது. 

இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை ஏ அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 எடுத்து ஆட்டம் டை ஆனது. இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளியை நடுவர் அறிவித்தார். ஆனால் இதனை இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா ஏற்க மறுத்தார். இதை தொடர்ந்து சூப்பர் ஓவர் ஆட்டம் நடைபெற்றது. 

இதில், இலங்கை ஏ அணி 16 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணி 9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. போட்டி முடிந்த போது, வைபவ் சூர்யவன்ஷியை நோக்கி இலங்கை வீரர் விஷின் ஹலம்பட்ஜ் தகாத வார்த்தை பயன்படுத்தினார். இதனால் பெவிலியன் திரும்பி கொண்டு இருந்த சூர்யவன்ஷிக்கு கோபம் வந்து, இலங்கை வீரர் விஷினை தாக்க முயன்றார். 

அப்போது உடன் இருந்த இலங்கை வீரர்கள் சூர்யவன்ஷியை தடுத்தனர். இந்த சம்பவம்  மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *