தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பல முக்கியத் தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி த.வெ.க முன்னிலை வகிக்கிறது.

கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா ஆகியோர் களமிறங்கி இருந்தனர். இதில் த.வெ.க விக்னேஷ் 1,00,040 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
1967 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மொத்தம் 13 முறை கிணத்துக்கடவு தொகுதி தேர்தலை சந்தித்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக அதிமுக 9 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏவான செ. தாமோதரன் மட்டும் 2001, 2006, 2011 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த தொகுதியில் திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளை தவிர வேறு எந்த கட்சியும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதில்லை.
இந்நிலையில் தான் புதிய கட்சியான தவெக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.