முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விரைவில் ராஜினாமா – கட்சியிலிருந்தும் விலக முடிவு!

Spread the love

அதிமுக தலைமை மீது நிலவும் அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர்,

தலைமை என்பது

அதிகாரமோ, ஆணவமோ அல்ல…

‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’

உழைக்கும் தொண்டர்களின் மனதை

வெல்ல முடியாத தலைமை,

மக்களின் மனதை எப்படி வெல்லும்?

உணர்வுகளை மதிக்காத இடத்தில்

உண்மையான பயணம் சாத்தியமா?

என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் விரைவில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதோடு, அதிமுகவில் இருந்தும் விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின், அவர் மாற்று கட்சியில் இணையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாற்று கட்சியில் இணைவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வரும் விஜயபாஸ்கரை, தவெகவில் இணையுமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *