சென்னை மாநகராட்சி கூட்டம்: தவெக அமைச்சர்,எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும் – காங்கிரசு வலியுறுத்தல் – Kumudam

Spread the love

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுகள், விசிக ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை தவெக அமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 1 மாதங்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று முதல் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. 

வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டம் தொடர்பாக சில கோரிக்கைகளை காங்கிரசு சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் தலைவரும், 6-வது வார்டு கவுன்சிலருமான திரவியம் நிருபர்களிடம் பேசுகையில், என்னுடைய வார்டு பிரச்னை குறித்தும், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். 

வரும் 24-ம் தேதி நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்திற்கு தவெக அமைச்சர் பெருமக்களையும், எம்எல்ஏக்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அப்படி மாநகராட்சி சார்பில் அழைக்காதபட்சத்தில், காங்கிரசு சார்பில் மாமன்ற கூட்டத்திற்கு அழைத்து வருவோம் என மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தேன். தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பது, செவிலியர்கள் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படியும் ஆணையரிடம் வேண்டுகோள் வைத்துள்ளேன். என்றார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *