முன்னோடி சிகிச்சையில் புதிய அத்தியாயம்…பல உறுப்பு மாற்று சிகிச்சையில் KIMSHEALTH நாகர்கோவில் – Kumudam

Spread the love

நாகர்கோவில்: தென் தமிழகத்தின் மருத்துவத் துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நாகர்கோவில் KIMSHEALTH மருத்துவமனை, குறுகிய காலத்திற்குள் ஐந்து வெற்றிகரமான பல உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டு, மேம்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சையில் தனது திறமையைப் பதிவு செய்துள்ளது. இந்த முக்கியமான சாதனை, தென் தமிழக மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உயர்நிலை மருத்துவ சிகிச்சைகளை அவர்களின் சொந்தப் பகுதியில் வழங்கும் மருத்துவ மையமாக KIMSHEALTH நாகர்கோவிலின் வளர்ந்து வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.

நிபுணத்துவமும் நவீன தொழில்நுட்பமும் இணையும் இடம்:

இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்குப் பின்னால், திறமையும் அனுபவமும் கொண்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய அர்ப்பணிப்புமிக்க மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது. இளம் தலைமுறையின் துடிப்பும், அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆழ்ந்த அறிவும் ஒருங்கிணைந்து, ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதனுடன், Multi-Organ Failure Clinic மற்றும் பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு, உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சையை உறுதி செய்கிறது.

நவீன அறுவை சிகிச்சை வசதிகள் உலகத் தரத்திலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவை சிகிச்சையின் துல்லியத்தை மேலும் உறுதியாகிறது. சிக்கலான இரத்த நாள இணைப்புகள் முதல் மிக நுட்பமான திசு சிகிச்சைகள் வரை, நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் உலகத் தரத்திற்கு இணையான சிகிச்சை வழங்கப்படுகிறது.

24 மணி நேர தீவிர சிகிச்சை – செவிலியர்களின் அக்கறை:

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு அறுவை சிகிச்சை மட்டும் போதுமானதல்ல. அதற்குப் பிந்தைய காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் தீவிர கண்காணிப்பும், நிபுணத்துவ சிகிச்சையும் மிக முக்கியமானவை.

KIMSHEALTH நாகர்கோவிலில் 24 மணி நேரமும் செயல்படும் மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சிக்கலான நோயாளிகளைக் கையாளும் வகையில் நவீன உயிர்காக்கும் வசதிகளுடன் செயல்படுகின்றன. குறிப்பாக, ECMO (Extracorporeal Membrane Oxygenation) மற்றும் CRRT (Continuous Renal Replacement Therapy) போன்ற மேம்பட்ட சிகிச்சை முறைகள் தேவையான நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஆதரவாக அமைகின்றன.

தொழில்நுட்பத்திற்கு இணையாக மனிதநேயமும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அனுபவமிக்க செவிலியர்கள் 24 மணி நேரமும் நோயாளிகளின் தேவைகளை கவனித்து, அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பை வழங்குகின்றனர்.

மேலும், இத்தகைய உயர்நிலை மற்றும் சிறப்பு மருத்துவச் சேவைகள் மக்களுக்கு ஏற்ற செலவில் வழங்கப்படுவது, உயிர்காக்கும் சிகிச்சை அனைவருக்கும் அணுகக்கூடியதாக அமைய உதவுகிறது.

யாருக்கு பல உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படலாம்?

கல்லீரல் செயலிழப்பு, தீவிர கல்லீரல் சிரோசிஸ், நீண்டகால சிறுநீரக நோய்கள், இறுதிநிலை இதய நோய்கள் மற்றும் பல்வேறு உடல் உறுப்புகளின் செயலிழப்பு போன்ற தீவிர நிலைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை ஒரு புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பாக அமையக்கூடும்.

முன்னர் இத்தகைய சிக்கலான சிகிச்சைகளுக்காக சென்னை, பெங்களூரு, கொச்சி போன்ற தொலைதூர நகரங்களை நாட வேண்டியிருந்த நிலையில், தென் தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு தற்போது தங்கள் சொந்தப் பகுதியில் மேம்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

நம்பிக்கையின் புதிய முகவரி:

மருத்துவ அறிவியலின் எல்லைகளை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மனிதநேயம் மற்றும் கருணையை தனது சிகிச்சையின் மையமாகக் கொண்ட KIMSHEALTH நாகர்கோவில், தென் தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவருகிறது.

ஐந்து வெற்றிகரமான பல உறுப்பு மாற்று சிகிச்சைகள் என்பது ஒரு மருத்துவ சாதனை மட்டுமல்ல; உறுப்பு செயலிழப்பால் போராடும் எண்ணற்ற நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் “நம்பிக்கை இருக்கிறது; வாழ்க்கைக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது” என்ற நம்பிக்கையை அளிக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

தென் தமிழகத்தின் மருத்துவ வரலாற்றில் புதிய தடம் பதித்து வரும் KIMSHEALTH நாகர்கோவில், நவீன மருத்துவத் தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் மனிதநேயப் பராமரிப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து, நம்பிக்கையின் புதிய முகவரியாகவும், மேம்பட்ட மருத்துவ சிகிச்சையின் முன்னோடி மையமாகவும் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

https://www.kimshealth.org/nagercoil/doctor/muraleedharan-r

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *