மும்பையின் மான்கூர்டு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் நான்கு மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், 5 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், விபத்துக்குள்ளான இந்த நான்கு மாடிக் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மான்கூர்டு ஜனதா நகர் பகுதியில் நேற்று இரவு நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேரில், நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இடிபாடுகளில் சிக்கிய நபியா (2), நிஹால் (6), அலியா (7), முனாஃப் (7), முஸ்கான் (14) ஆகிய 5 குழந்தைகள், சோனி (32) என்ற பெண் ஆகியோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இரவு 8.30 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர் நவ்நாத் பான் தெரிவித்தார். ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி கவுன்சிலர் விஜய் உபலே விபத்து விபத்து குறித்து கூறுகையில்,“மிக மோசமான நிலையில் இடிந்து விழும் தருவாயில் இருந்த இரண்டு கட்டடங்களை, ஞாயிற்றுக்கிழமை மதியமே அதிகாரிகள், குடியிருப்பாளர்கள் சேர்ந்து காலி செய்திருந்தனர்.
ஆனால் ஆபத்தை உணராமல், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் பல உள்ளூர் மக்கள் மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் திரும்பிய சில மணி நேரங்களிலேயே இந்த பயங்கர கட்டட விபத்து நிகழ்ந்துள்ளது”‘ என்று குறிப்பிட்டார்.
மும்பை மேயர் ரிது தாவடே இந்த விபத்து குறித்து கூறுகையில்,” வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட போதிலும், மக்கள் தொடர்ந்து விதிகளுக்குப் புறம்பாக இது போன்ற சட்டவிரோத கட்டடங்களில் வசித்து வருகின்றனர்.