அப்பெண்ணைத் தள்ளிவிட்ட நபர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார். ஆனால் சில மணி நேரத்தில் அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்து ஒரு கையை இழந்த பெண் கூறுகையில், “‘நான் நைகாவிற்குச் சென்று கொண்டிருந்தேன். போரிவிலியில் ரயிலில் ஏறினேன். நைகாவ் ரயில் நிலையம் நெருங்கும்போது, என்னைத் தகாத முறையில் தொட்டு ஒரு நபர் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார்.
நான் அதனை எதிர்த்தேன். நான் ரயிலில் இருந்து இறங்கிய பிறகும், அவர் என்னைத் தகாத முறையில் தொட்டார். நான் அவரிடம் உங்களுக்கு வீட்டில் அம்மா இல்லையா? என்று கேட்டேன். ஆனாலும், அவர் தொடர்ந்து என்னைத் துன்புறுத்தினார்.

நான் அவரை என் செருப்பால் அடித்து விரட்ட முயன்றபோது, அவர் தனது சொந்த செருப்பால் என்னைத் தாக்கினார். பிறகு, அவர் என்னை ரயிலில் இருந்து தள்ளிவிட்டார், எனக்கு நீதி வேண்டும். என் வாழ்க்கை முழுவதும் நாசமாகிவிட்டது. நான் என் குடும்பத்தில் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டேன்.
என் ஒரு கையால் எதையும் செய்ய முடியாது. எனக்கு தலையில் 16 தையல் போடப்பட்டுள்ளது. என்னைத் தள்ளிவிட்டவர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.