முரசு புயலின் லேட்டஸ்ட் அப்டேட்டை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை மையத்தின் எக்ஸ் தளப் பதிவின் படி, “மத்திய-மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய முரசு எனும் கடும் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணி நேரத்திற்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) காலை 8:30 மணி அளவில் மத்திய-மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.
இது நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே – தென்கிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும்,
The #Severe_Cyclonic_Storm “#Murasu” [Pronunciation: Murasu]” over Westcentral & adjoining Southwest Bay of #Bengal moved west-northwestwards with a speed of 22 kmph during past 06 hours and lay centered at 0830 hours IST of today, the 02nd #November, 2026 over the Westcentral Bay of Bengal near Latitude 14.1°N and Longitude 81.4°E, about 160 km east-southeast of Nellore (Andhra Pradesh), 180 km northeast of Chennai (Tamil Nadu), 180 km east-southeast of Kavali (Andhra Pradesh), 210 km southeast of Ongole (Andhra Pradesh) and 240 km south of Machilipatnam (Andhra Pradesh).
It is very likely to move northwestwards and cross south #Andhra #Pradesh coast as a #Severe_Cyclonic_Storm with wind speed of 100 to 110 kmph gusting to 120 kmph between #Nellore and #Narsapur, to the south of #Ongole during midnight (2330 Hrs IST) of today, the 02nd November to early hours (0400 Hrs IST) of tomorrow, the 3rd November, 2026. #CycloneMurasu
— India Meteorological Department (@Indiametdept) November 2, 2026
காவாலிக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே – தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும், ஓங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 210 கி.மீ தொலையிவிம், மச்சிலிப்பட்டணத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே 240 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) நள்ளிரவு (இரவு 11:30 மணி) முதல் நாளை (நவம்பர் 03) அதிகாலை (காலை 04:00 மணி) இடைப்பட்ட காலத்தில், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே,
ஓங்கோலுக்குத் தெற்கே, மணி நேரத்திற்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும் இடை இடையே 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கடும் புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (நவம்பர் 1), சென்னை வானிலை மையத்தின் தகவலின் படி, இன்றும் (நவம்பர் 2), நாளையும் (நவம்பர் 3) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

