`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!' – செல்லூர் ராஜூ

Spread the love

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக  அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணையில் உள்ள மன்னனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ” மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மன்னனை கைது செய்து வைத்துள்ளனர். என்னையும் உள்ளே வைத்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு பி.எம்.மன்னனை தனி அறையில் வைத்துள்ளனர்.

மதார் முஸ்தபா
மதார் முஸ்தபா

முஸ்தபாவும் மன்னனும் நெருங்கிய நண்பர்கள். மாமன், மைத்துனன் என்ற அடிப்படையில் பேசியுள்ளனர். உங்க நிர்வாகிகள் கட்சி பதவிக்கு பணம் வாங்குவதாக ரீல்ஸ் வருகிறதே என எம்எல்ஏ முஸ்தபாவிடம் மன்னன் பேசியுள்ளார். அதற்கு தான் இது போன்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்குறியான குதிரைபேர அரசாக இந்த அரசு உள்ளது. பணம் கொடுத்து எம்எல்ஏவை வாங்கி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற  எண்ணம் கடுகளவும் இல்லை; நாங்கள் மக்களை சந்திப்போம், குறுக்குவழியில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை; இந்த ஆட்சியே கவிழப் போகிறது.

முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது… கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர். இந்த ஆட்சிக்கு இருக்கிற அவப்பெயரை மறைக்க, விலைவாசி உயர்வை மறைக்க இது போன்ற கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.

மன்னன் மீதான கைது நடவடிக்கையை அதிமுக சார்பில் கண்டிக்கிறோம்; சம்மன் 7 ஆம் தேதி என கொடுத்துவிட்டு இன்றே கைது செய்யும் அளவிற்கு அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல; தவெகவினர் போல போதைப்பொருள் விற்பவர் அல்ல; மன்னனை தீவிரவாதி போல அடைத்துவைத்துள்ளனர். 

பி.எம்.மன்னன்

100 கோடிக்கு மேல் முஸ்தபா கேட்கிறாரா? முஸ்தபா ஜாக்பாட்டில் மத்திய தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

கவுன்சிலர் பதவியை முஸ்தபா ஏலம் விடுகிறார்; அவருடைய பிரதிநிதி கனிராஜாதான் பேசுகிறார். கடந்த ஆட்சியில் செய்ததை போலவே இந்த ஆட்சியிலும் மக்கள் பிரச்னையை திசை திருப்புகிறார்கள்.

இந்த விவகாரத்தில் புகார் கொடுத்தவர் யோக்கியரா? ஆட்சியில் தவெக இருந்தாலும் காவல்துறையினர் தங்களது கண்ணியத்தை காப்பாற்றுவார்கள்  என நம்புகிறேன்.

மன்னன் அப்படிப்பட்ட ஆள் இல்லை, இப்போது தான் சேர்ந்தார், அவரை வைத்து இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, குறுக்கு வழியில் செல்ல தேவையில்லை. 

நிர்மல்குமாரை அவரது துறையை சரியாக பாரக்கச் சொல்லுங்கள்; கடந்த ஆட்சியில் யூனிட் 20 என்றால் இவர்கள் 36 ரூபாய் என்கிறார்கள்; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை.

Paடத்தன்மையோடு இல்லை.

உலகத்திலயே பேசாத முதலமைச்சர் விஜய் மட்டும் தான்; அரசு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை ; அனைத்து அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள். இந்த அரசு எவ்வளவு விரைவாக முடிகிறதோ அப்போது மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், சிறுமிகள் காப்பாற்றப்படுவார்கள், அதற்கு உள்ளாட்சி தேர்தல் முடிவே சாட்சியாக இருக்கும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *