தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.6) “மூக்குத்தி அம்மன்- 2′ படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுந்தர்.சி, “ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியில் கதாநாயகி, வில்லி என இரண்டு பெண்கள் நடித்திருக்கிறார்கள். லேடி பவர் கொண்ட ஒரு படம் இது. திருவிழாவிற்கு எப்போதும் ஒரு கொண்டாட்டமான படத்தையே எதிர்பார்ப்போம்.

அந்தவகையில் ‘மூக்குத்தி அம்மன்’ ஒரு கொண்டாட்டப் படமாக இருக்கும். இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு பக்தி படம் என்று சொல்ல மாட்டேன். இது ஒரு என்டர்டெயினர் படம். இரண்டு மணி நேரம் கலகலப்பாக ஜாலியாக இருக்கும்.
பக்தி நிறைந்த ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும். படத்தில் க்ளைமாக்ஸ் 20 நிமிடங்கள். அந்த க்ளைமாக்ஸிற்காக ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.