மெக்கா மரண தண்டனை விவகாரம்: சவூதியிடம் விளக்கம் கேட்கும் வங்கதேசம்|Executed Without Prior Notice? Bangladesh Demands Answers From Saudi Arabia

Spread the love

சவூதி அரேபியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதியினருக்குக் கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இது குறித்து சவூதி அரேபியாவின் அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், “மெக்காவில் உள்ள புனிதப் பள்ளிவாசலுக்குள் வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதி அக்தர் பாலின ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டனர்.

உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தம்பதி

தம்பதி
சித்தரிப்புப் படம்

இதையடுத்து 2026-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி மெக்காவில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், அது எந்தவிதமான செயல் என்று சவூதி அரசு தெரிவிக்கவில்லை.

மரணத் தண்டனை குறித்து வங்கதேசத்திடம் முன்னரே தெரிவித்துவிட்டதாக சவூதி அரேபியா கூறுகிறது.

ஆனால், வங்கதேச அரசு தங்களிடம் இது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறது. மேலும், சவூதி அரேபியாவிடம் இந்த வழக்கு குறித்த தரவுகளைக் கேட்டுள்ளது.

குறிப்பிட்ட தேசத்திடம் தெரிவிக்காமல், அந்த நாட்டின் குடிமக்களுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *