2 persons Rescued Alive From Hydropower Tunnel 9 Days After Nepal Floods | நேபாள வெள்ளம்: நீர்மின் சுரங்கத்துக்குள் 9 நாட்கள்… உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்!

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, மண்ணாலும் குப்பைகளாலும் மூடப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணிகளுக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தின் பல பகுதிகளை திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு புரட்டிப்போட்டது. பனிப்பாறை சரிவு காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திரிசூலி பகுதியில் அமைந்துள்ள Trishuli-3A Hydropower Project-ம் இந்தப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளத்துடன் அடித்துவந்த சேறும் குப்பைகளும் சுரங்கத்தின் நுழைவுப் பகுதிகளை மூடியதால், உள்ளே வேலை செய்த பலரின் நிலை என்னவென்று தெரியாமல் போனது.

இந்த நிலையில், ஒன்பது நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் இருந்து கபீர் மகர்ஜன் (45),சஞ்சய் ஷா (30) ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் சுரங்கத்தின் உள்ளே சுமார் 170 மீட்டர் தொலைவில் இருந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் நடத்திக்கொண்டிருந்தபோது சுரங்கத்துக்குள் இருந்து சத்தங்கள் கேட்டதாகவும், அதன் பிறகு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஞ்சய் ஷா ,Nepal Electricity Authority-யில் Mechanical Foreman-ஆக பணியாற்றி வந்தவர்.கபீர் மகர்ஜன்,Trishuli-3A திட்டத்தில் Supervisor-ஆக இருந்துள்ளார். நீண்ட நேரம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்ததால் இருவருக்கும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *