மெக்சிகோவை வீழ்த்திய இங்கிலாந்து… கால் இறுதிக்கு அதிரடி முன்னேற்றம்! – Kumudam

Spread the love

23 வது உலகக்கேப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. லீக் மற்றும் 2வது சுற்று முடிவில் 16 அணிகள் 3வது சுற்றுக்கு முன்னேறின.தற்போது 3வது சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு  மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் வாய்ப்புகளை உருவாக்கியபோது 36 வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜுட் பெல்லிங்ஹாம் முதல் கோலை பதிவு செய்தார்.அதனைத் தொடர்ந்து 38-வது நிமிடத்தில் மீண்டும் ஜுட் பெல்லிங்ஹாம் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டம் தீவிரமான நிலையில் மெக்சிகோ இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது.

அப்போது 42-வது நிமிடத்தில் ஜுலியன் கினோனெஸ் கோல் அடித்து முன்னிலையை குறைத்தார். இதனால் முதல் பாதி 2-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது. 

ஆட்டத்தின் 2-வது பாதியில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. அப்போது ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி கொண்டு ஹாரி கேன் தனது முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு மெக்சிகோ அணி உடனடியாக பதிலடி கொடுத்தது.

ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை ரவுல் ஜிமெனெஸ் கோலாக மாற்றி, இதன் மூலம் 1 கோல் மட்டுமே இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் அதை கோலாக மாற்றமுடியவில்லை. 90வது நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து 3-2 என முன்னிலையில் இருந்தது. இதன் பின் கூடுதலாக 11 நிமிடங்கள் வழங்கப்பட்டன. சமனிலை கோலுக்காக மெக்சிகோவும் 4-வது கோலுக்காக இங்கிலாந்தும் கடுமையாக போராடின. இருப்பினும் எந்த கோலும் பதிவாகவில்லை.

இதனால் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவை வெளியேற்றி கால் இறுதி சுற்றுக்கு  தகுதி பெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *