Business
oi-Velmurugan P
சென்னை : உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மிகத் தீவிரமாக உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு தணிந்திருத்தல் ஆகியவற்றின் காரணமாக, கடந்த வாரத்தில் இருந்தே இந்தியா முழுவதும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. நேற்று ஞாயிறு என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.1,08,480க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 குறைந்து ரூ.13560க்கு விற்பனையாகிறது.
