''மெய்யழகன்' பிரேம் குமாருடனான படம் எப்போது ரிலீஸ்?' – பகத் பாசில் கொடுத்த அப்டேட்

Spread the love

‘பிரேமலு’ பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.

நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தை பகத் பாசில் தனது பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

'பெத்லகேம் குடும்ப யூனிட்'
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நாளை வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று (செப். 2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பகத் பாசில், “முதலில், எங்கள் படக்குழு சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

நிவின் பாலி, மமிதா பைஜூ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.

எப்போதும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

அந்த வகையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் எங்களுக்கு மிகவும் சிறப்பான படமாகும். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

இது மிகவும் அழகான மற்றும் சிறப்பான திரைப்படம். நல்ல திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஃபஹத் பாசில்
ஃபஹத் பாசில்

அந்த வகையில், இப்படம் உலகம் முழுவதும் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் பிரேமுடன் நான் இணைந்து பணியாற்றியுள்ள அடுத்த தமிழ்த் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

அப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *