மெளனம் கலைத்த செளமியா; ரூட் எடுத்த பா.ம.க-வினர் டு ஜெம் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து விலகல்?| கழுகார் | Kazhugar updates on Sowmiya anbumani and By election update

Spread the love

தாராபுரத்தில் வாக்கு வேட்டையாடுவதற்காக, சைக்கிள் பேரணியை நடத்தினார்கள் சில அமைச்சர்கள். அப்போது, ஒரு சீனியர் அமைச்சரின் காதோடு ரகசியம் பேச வந்த ஒரு எம்.எல்.ஏ., நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து விழுந்தார். ஆனால், அதைக் கண்டுக்கொள்ளாமல் சைக்கிளை ஓட்டிக்கொண்டுச் சென்றுவிட்டார் சீனியர் அமைச்சர். அவர் காதில் பேச வந்த ரகசியம்தான், இப்போது அமைச்சர்களுக்குள் பேசுபொருளாகி இருக்கிறது.

அதாவது, தன்னுடைய தொகுதி அடங்கியிருக்கும் மாவட்டத்துக்குள் கனிமவளத்தை எடுத்துக் கொள்ளவும், ஊரகப் பகுதிகளில் சில டெண்டர்களை தனக்குச் சாதகமாக முடித்துக் கொள்ளவும், அந்த சீனியர் அமைச்சரிடம் பேசினாராம் எம்.எல்.ஏ.

‘என் கையில எதுவும் இல்லை. எல்லாமே மேலிடம் எடுக்குற முடிவுதான்’ என்று தட்டிக் கழித்து வந்திருக்கிறார் அமைச்சர்.

அப்போதும் விடாத எம்.எல்.ஏ., ‘ஒரு தொகுதிக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்து ஏமாத்திட்டீங்க. துணைப் பொதுச்செயலாளர் மாதிரி கெளரவ பதவியையும் சேர்த்துக் கொடுங்கண்ணே…’ என்று நச்சரித்திருக்கிறார். அப்போதுதான், நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து விழுந்தாராம் எம்.எல்.ஏ. திரும்பிப் பார்க்காமல், தொல்லைவிட்டது என சிட்டாக சென்றுவிட்டாராம் சீனியர் அமைச்சர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *