‘மெழுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?’ – நவல்பட்டு விஜி சர்ச்சை பின்னணி! |’Not a Candle Fight, but a Fight for Honour?’ – What Is the Navalpattu Viji Controversy?

Spread the love

தேர்தல் நெருக்கத்தில் எங்களின் தலைமை அன்பில் மகேஸின் திருவெறும்பூர் தொகுதிக்கு ஒரு வலுவான வேட்பாளரைத் தேடியது. சிட்டிங் அமைச்சரின் தொகுதி என்பதால் பெரிதாக யாரும் நிற்க விரும்பவில்லை. நிற்கிறேன் என விருப்பம் தெரிவித்தவர்களும் வலுவானவராக இல்லை.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுதான் நவல்பட்டு விஜி சீனுக்குள் வருகிறார். லோக்கல் மா.செவைப் பிடித்து எங்களின் தலைமைக்குத் தூது விடுகிறார். மகேஸை எதிர்க்க திமுகவிலிருந்தே ஒரு ஆள் வருவதால் எங்களின் தலைமையும் அவரை வேட்பாளர் ஆக்கியது.

தமிழகம் முழுவதையும் போல திருவெறும்பூர் தொகுதியிலும் எங்களின் தலைவர் முகத்துக்காகத்தான் ஓட்டு விழுந்து விஜி வென்றார். ஆனால், அமைச்சரையே தோற்கடித்ததால் தலைமை தன்னைக் கவனித்து அமைச்சர் பதவி வழங்கும் என எதிர்பார்த்தார்.

நவல்பட்டு விஜி

நவல்பட்டு விஜி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வென்ற ரமேஷை அமைச்சராக்கிவிட்டு, துறையூரில் வென்ற ரவிசங்கரை துணை சபாநாயகராக்கிவிட்டு இவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். எம்.எல்.ஏ ஆனவுடன் ஏற்கனவே கட்சியில் இருக்கும் மக்கள் இயக்க நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு தன்னுடைய ஆட்களை கட்சிக்குள் நுழைக்க முயன்றார்.

அதனால் லோக்கல் நிர்வாகிகளுக்கும் விஜிக்கும் முட்டிக் கொண்டது. பனையூரில் நடந்த ஓர் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலேயே ஆதவ் அர்ஜுனாவிடம் கொஞ்சம் ஏத்தமாக, ‘நாங்கெல்லாம் எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிங்க யாரும் எங்களை மதிக்கிறது இல்ல. கொஞ்சம் கண்டிச்சு வையுங்க’ என எகிறியிருந்தார்.

‘வேறு கட்சியிலிருந்து வந்த உங்களுக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கியதே பெருசு. பக்குவமாக நடந்துக் கொள்ளுங்கள்’ என ஆதவ்வும் விஜியை எச்சரித்துவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *