மெஸ்ஸி கூட பக்கத்துல இல்லை.. 20 ஆண்டுகால ரொனால்டோ சாதனையை சுக்குநூறாக்கிய எம்பாப்பே! | FIFA World Cup: Kylian Mbappe Surpasses Ronaldo Nazário, Closing in on Lionel Messi’s All-Time Tally

Spread the love

Sports

oi-Yogeshwaran Moorthi

நியூ ஜெர்சி: 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் சுற்றில் ஸ்வீடன் அணிக்கு எதிராக பிரான்ஸ் ஆணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோவின் (Ronaldo Nazario) மிக முக்கியமான சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் பலமான அணியான பிரான்ஸ் அணியை எதிர்த்து ஸ்வீடன் களமிறங்கியது. இந்தப் போட்டியில் 45வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி முதல் கோலையும், 53வது நிமிடத்தில் 2வது கோலையும், 74வது நிமிடத்தில் 3வது கோலையும் அடித்தது.

FIFA World Cup

இதன் மூலமாக ஸ்வீடன் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே 2 கோல்களை அடித்து மிரள வைத்தார். இதன் மூலமாக புதிய சாதனையையும் படைத்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து தொடர்களில் அதிக அழுத்தங்கள் நிறைந்த நாக்-அவுட் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகி இருக்கிறார்.

நாக் அவுட் போட்டிகளில் இதுவரை பிரேசில் ஜாம்பவான்களான ரொனால்டோ நசாரியோ மற்றும் லியோனிடாஸ் ஆகியோர் தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தனர். ஸ்வீடனுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 கோல்களை அடித்த எம்பாப்பே, அவர்களை முந்தி உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் 10 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

நவீன கால்பந்தின் ஜாம்பவான்களாகக் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரால் கூட இந்த நாக்-அவுட் சாதனையை நெருங்க முடியவில்லை. உலகக்கோப்பையில் ஒட்டுமொத்தமாக 19 கோல்கள் அடித்து வரலாற்று முதலிடத்தில் இருந்தாலும், நாக்-அவுட் சுற்றுகளில் அவர் அடித்தது வெறும் 5 கோல்கள் மட்டும்தான்.

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது உலகக்கோப்பை வரலாற்றில் நாக்-அவுட் சுற்றுகளில் இதுவரை ஒரு கோல் கூட அடித்ததில்லை. எம்பாப்பே இந்த ஆட்டத்தில் அடித்த 2 கோல்களின் மூலம், 2026 உலகக்கோப்பை தொடரில் எம்பாப்பேவின் தற்போதைய கோல் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நடப்புத் தொடரின் அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான ‘கோல்டன் பூட்’ ரேஸில் லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இருப்பினும், எம்பாப்பே 2 அசிஸ்ட்களை செய்துள்ளதால் மெஸ்ஸியை விட முன்னிலையில் இருக்கிறார். வெறும் 18 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 18 கோல்களை அடித்துள்ள 27 வயதேயான எம்பாப்பே, ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் மெஸ்ஸியின் 19 கோல்கள் சாதனையை முறியடிக்க இன்னும் ஒரே ஒரு கோல் மட்டுமே தேவை என்பதால், அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *