“அதிமுவுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; விமர்சிக்க அவருக்கு அருகதை இல்லை”- கே.பி முனுசாமி பதிலடி |admk k.p munusamy slams tvk aadhav arjuna

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் த.வெ.கவில் இன்று இணைந்திருக்கின்றனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ” ஒட்டுமொத்த அதிமுகவும், அதன் தொண்டர்களும் த.வெ.கவில்தான் இருக்கிறார்கள். 2026ல் த.வெ.கவின் வெற்றி அதிமுக தொண்டர்களின் வாக்குகள் இல்லாமல் கிடைத்திருக்காது. அந்த மரியாதையும் அன்பும் எங்களுக்கு இருக்கிறது” என்று பேசியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கே.பி முனுசாமி ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்திருக்கிறார். ” பதவி சுகம் அனுபவித்தவர்கள் த.வெ.கவில் இணைந்திருக்கின்றனர். அப்படி இணையும்போது ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்து தான்தோன்றிதனமாக கருத்துக்களை பதிய வைத்திருக்கிறார்.

அவருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடுகிறார். திமுகவிற்கு சென்றார் அங்கு வாய்ப்பில்லை. அதேபோல விசிகவிற்கு சென்றார் அங்கும் வாய்ப்பில்லை. பிறகு அதிமுகவுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார். ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *