மேகதாது: “மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு… ஆனால், நாம்?” – அன்புமணி வலியுறுத்தல்

Spread the love

மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன்.

அதன் பயனாக, மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும், சென்னை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

இவ்வளவுக்கும் பிறகும் மேகாதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நகர்வுகளை கண்டும் காணததைப் போல தமிழக அரசு அமைதி காப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இது என்ன வகையான அரசியல் உத்தி என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை.

மேகதாது அணை கட்ட விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வள ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்படுவது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்தை வலியுறுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படையானக் கடமை ஆகும். அந்தக் கடமையை தமிழ்நாடு அரசு எப்போது நிறைவேற்றி, காவிரியை பாதுகாக்கப் போகிறது?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *