ஆனால், இங்கே கூட்டம் அப்படியே காத்திருக்கிறது. புரட்சித் தலைவரை காண வரும் கூட்டத்தைப் போல இருக்கிறது. புரட்சித் தலைவரே மறுபிறவி எடுத்து வந்துவிட்டாரோ… எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் உடன்படிக்கை செய்துவிட்டு எங்களிடம் வந்து நான் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என மகிழ்ச்சியாக கூறினார். எடப்பாடி பழனிசாமி என்கிற தலைமை பிடிக்காமல்தான் நாங்கள் வெளியே வந்தோம். அந்தக் கட்சிக்கு நாங்கள் துரோகம் செய்யவில்லை.
ஒரு இயக்கத்தின் பொதுச்செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆனந்த் அண்ணனே சாட்சி. பொதுச்செயலாளர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடப்பாடியே சாட்சி. ஒரு பெண் என்றும் பாராமல் வலைதளங்களில் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள். போனை பார்த்தே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான் என்ன தவறு செய்தேன்? அம்மாவுக்கு உண்மையாக இருந்தேன். திமுகவுடன் கூட்டணி பேசியதால்தான் நான் அந்த கட்சியிலிருந்து வெளியேறினேன். உங்களின் பதவி சுகத்துக்காக என்னை ஆபாசமாக பேசுகிறீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை..’ எனக் கூறி கண்கலங்கி அழுதார்.
உடனே முதல்வர் விஜய் அவரின் தோளை தட்டி ஆறுதல் கூறினார்.