Amala Paul: “ஆடை படம் போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்” – நடிகை அமலா பால் ஓபன் டாக்!| Actress Amala Paul has shared her thoughts on acting in the movie Aadai.

Spread the love

2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் “ஆடை’. இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், அனன்யா ராமபிரசாத், விவேக் பிரசன்னா, ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுதந்திரமான சிந்தனை கொண்ட காமினி என்ற செய்தி ஊடகப் பெண், பார்ட்டி கொண்டாட்டத்திற்குப் பிறகு ஒரு பாழடைந்த கட்டடத்தில் ஆடைகளின்றி விழித்தெழும் சூழலையும், அதிலிருந்து தப்பிக்க போராடும் அவளது வாழ்வியல் போராட்டத்தையும் ஒரு த்ரில்லர் கதையாக இப்படம் விவரித்தது. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

அவர் அளித்திருக்கும் பேட்டியில், “ஆடை படத்தில் நடித்தபோது என் இமேஜ் குறித்து பயம் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அதில் நிச்சயம் நடிக்க மாட்டேன். இந்தப் படத்தின் கதை என்னிடம் கூறி, நான் நடிப்பது உறுதியானதிலிருந்து, இயக்குநர் ரத்னா குமார் இந்த கதையை எவ்வாறு கையாளப் போகிறார், ஆடையில்லாத காட்சிகள் படத்தின் கதைக்கு அவசியமானதாக இருக்குமா அல்லது விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா என யோசித்துக்கொண்டே இருந்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *