மேட்டூர் அணையை திறக்கும் முதலமைச்சர் விஜய்! வெளியானது முழு நிகழ்ச்சி நிரல்! | CM Vijay to Open Mettur Dam for Delta Irrigation Tomorrow: Full Schedule Released

Spread the love

Tamilnadu

oi-Halley Karthik

சேலம்: முதலமைச்சர் விஜய் நாளை மேட்டூர் அணையிலிருந்து நீரை திறக்கிறார். இந்நிலை அணை எத்தனை மணிக்கு திறக்கப்படுகிறது என்பது குறித்த முழு நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கர்நாடகா உரிய நேரத்தில் போதுமான நீரை விடுவிக்காததால்.. அணை திறக்கப்படவில்லை.

Chief Minister Vijay

நமக்கான தண்ணீர் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்றுக்குழு என்று அனைத்து தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டதையடுத்து தற்போது கர்நாடகா மினிமம் அளவுக்கு தண்ணீர் திறந்திருக்கிறது. இதனால் ஜூன் தொடக்கத்தில் 90 அடியை எட்ட வேண்டிய மேட்டூர் அணை, 3 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் எட்டியிருக்கிறது. இந்நிலையில், நாளை முதலமைச்சர் விஜய் அணையிலிருந்து காவிரி நீரை திறந்து வைக்கிறார். இதற்காக நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது.

மேட்டூர் அணையில் திண்டுக்கல் மாவட்ட டிஐஜி சசிமோகன் மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அணையை தீவிரமாக ஆய்வு செய்திருக்கின்றனர். அணையிலிருந்து பாசனத்திற்கு முதல்வர் விஜய் தண்ணீர் திறக்க உள்ள நிலையில், அணை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மேட்டூர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை காலை 12 மணிக்கு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதல்வர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அணையில் நீர்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் அணை குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். தொடர்ந்து அணை மின் நிலையத்தை பார்வையிடும் முதல்வர், அங்கிருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *