எடிட் செய்து…
இதன் காரணமாக, தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளைக் கண்டித்து நான் மேடைகளில் பேசும்போதெல்லாம், அதற்கு மறுநாளே விர்ச்சுவல் அப்யூசர்ஸ் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் என்னை மிகவும் தவறாகச் சித்தரிக்கத் தொடங்குகிறார்கள்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பரப்பி, எங்கள் கழகத்தைச் சேர்ந்தவர்களுடனேயே தவறான முறையில் தொடர்புபடுத்திப் பதிவிட்டு வருகிறார்கள். இத்தகைய பதிவுகள் பொதுமக்களிடையே பரவுவது எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கிறது.
இதுகுறித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் ஏற்கனவே நான் புகார் அளித்திருந்தேன். ஆனால், இந்நாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்றைக்கும் மீண்டும் என்னை இழிவுபடுத்திச் சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக இன்று மீண்டும் ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளேன். தற்போதைய தவெக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பு, பெண்களுக்கான உரிமை என்று மேடைகளில் நிறையப் பேசியவர்கள், ஒரு மேயராகவும் பெண்ணாகவும் இருக்கக்கூடிய நான் இத்தனை முறை முறையிட்டும், இதுவரை மௌனம் காக்கும் முதலமைச்சராகவே இருக்கிறார்.
இதற்கு எப்போது விடை கிடைக்கும் என்ற கேள்வியை இந்த இடத்தில் நான் முன்வைக்கிறேன்.