மேற்கு நாடுகளில் எறும்பை வேடிக்கை பார்ப்பது ஒரு 'Hobby' – என்னது, ஒரு எறும்பின் விலை ரூ.21,000-ஆ?

Spread the love

‘சாதாரண’ எறும்பு என்று நாம் நினைக்கும் உயிரினம் விலை உயர்ந்த ஒன்றாக இருக்கிறது.

கருப்பு சந்தையில் ஒரு ராணி எறும்பு ரூ.10,000 முதல் ரூ.21,000 வரை விலை போவதாகத் தெரிகிறது.

கடந்த மார்ச் மாதம், கென்யா நாட்டின், ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளைச் சோதனை செய்து கொண்டிருந்த அதிகாரிகள் ஒரு பையைத் திறந்தபோது ஆச்சரியமடைந்துள்ளனர்.

ராணி எறும்பு
ராணி எறும்பு

அந்தப் பையின் உள்ளே சிறிய சோதனை குழாய்களில் ஈரமான டிஷ்யூ சுற்றி வைக்கப்பட்ட நிலையில், உயிருடன் இருந்த சுமார் 2,200 எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ராணி எறும்புகள்.

இந்த எறும்புகளைக் கடத்த முயன்றவர் சீனாவைச் சேர்ந்த ஜாங் கீகுன்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள எறும்பு வளர்ப்பு ஆர்வலர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவற்றை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

மேற்கு நாடுகளில் எறும்புகளை அக்ரிலிக் பெட்டிகளில் வளர்த்து, அவற்றின் செயல்பாடுகளைப் பார்ப்பது ஒரு பிரபலமான ஹாபியாக உள்ளது.

ஒரு புதிய எறும்புக் கூட்டத்தைத் தொடங்க ராணி எறும்பு அவசியம் என்பதால், இவற்றிற்கான தேவை அதிகமாக உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கென்யா நீதிமன்றம், ஜாங் கீகுனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 10 லட்சம் கென்ய ஷில்லிங் அபராதமும் விதித்தது.

எறும்புகளை கடத்துவதால் என்ன பிரச்னை?

இந்த எறும்புகள் அனைத்தும் ராணி எறும்புகள். ஒரு ராணி எறும்பு மட்டும் இருந்தாலும், அது முட்டையிட்டு ஒரு முழு எறும்புக் கூட்டத்தை உருவாக்க முடியும்.

ராணி எறும்பு
ராணி எறும்பு

இந்த எறும்புகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அதிக அளவில் எடுத்துச் சென்றால், அந்த இடத்தில் எறும்புகளின் எண்ணிக்கை குறையும்.

அதனால் அங்குள்ள மண் நிலை மற்றும் பூச்சிகளின் கட்டுப்பாடு போன்ற இயற்கைச் செயல்களில் பாதிப்பு ஏற்படும்.

அதே நேரத்தில், இந்த எறும்புகளை வேறு நாட்டிற்கு கொண்டு சென்றால், அங்கு இயல்பாக இல்லாத புதிய எறும்புகள் வளரத் தொடங்கும்.

அவை அங்குள்ள பிற உயிரினங்களுடன் போட்டி போட்டு, அவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கலாம்.

இதனால், எறும்புகள் எடுத்துச் செல்லப்பட்ட இடமும், கொண்டு செல்லப்பட்ட இடமும் — இரண்டிலும் இயற்கை சமநிலை மாறும்.

மேலும், எறும்புகள் மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், சில பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

இந்தச் சம்பவம், சிறிய உயிரினங்கள் கூட, சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *