மேற்கு வங்கம்: “தாமரை எங்கும் மலரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்ளுக்கு.!”- மோடி வாக்குறுதி | West Bengal: “The lotus will bloom everywhere; if we come to power, for women…!” – Narendra Modi’s promise

Spread the love

இது மாற்றத்துக்கான சரியான நேரம். வங்காளத்தின் இரக்கமற்ற அரசைக் கவிழ்க்க இதுவே சரியான தருணம் என்று வங்காள மக்களிடம், குறிப்பாக எனது முதல் முறை வாக்காளர்களிடம், கூறுகிறேன். இதுவே உகந்த நேரம்.

நம் அனைவரையும் ஆசீர்வதிக்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தாய்மார்களும் சகோதரிகளும் இங்கு கூடியிருப்பது, திரிணாமுல் காங்கிரஸின் தூக்கத்தைக் கெடுக்கும். திரிணாமுல் காங்கிரஸ் வங்காளப் பெண்களின் உரிமைகளை அபகரித்துள்ளது.

வங்காளம் துர்கா தேவியை வழிபடும் பூமி. திரிணாமுல் காங்கிரஸ் பலமுறை பெண்களின் கண்ணியத்தை அவமதித்து, அவர்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்துள்ளது. உங்களின் ஒரே ஒரு வாக்கு, இதற்காக அவர்களைப் பொறுப்பேற்கச் செய்யும்” என்று பேசிய மோடி பாஜகவின் பெண்களுக்கான வாக்குறுதிகளையும் அறிவித்தார். அதன்படி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

* பெண் குழந்தைகள் பட்டப்படிப்பை முடிக்க 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

* அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி.

* பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்தல்.

* பெண்களுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

* சுய உதவிக்குழுக்கள் மூலமாக பெண்களுக்கு அதிக கடன் வசதி மற்றும் தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.

* மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனி அதிரடி படை மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

* ஒரு லட்சம் பெண்களுக்கு நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

* பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் பெண்களுக்கு வீடு வழங்கப்படும்.

* முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு வழங்கப்படுகின்ற ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தரப்படும்” என்று வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *